10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (2)
Share

சென்னை : 10,11 மற்றும் 12 ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.



latest tamil news




கடந்த 3 ஆண்டுகளாக முன்கூட்டியே பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2019 -20 ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு துவங்கும் நாள், முடியும் நாள், முடிவுகள் வெளியிடப்படும் நாள் ஆகியவற்றின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விபரம் :
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ம் தேதி துவங்கி, மார்ச் 24 ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ம் தேதி வெளியிடப்படும்.


latest tamil news




11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ம் தேதி துவங்கி, மார்ச் 26 ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 14 ம் தேதி வெளியிடப்படும்.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 17 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 9 ம் தேதி நிறைவடைகிறது. மே 4 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X