பொது செய்தி

இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (20)
Advertisement

பெங்களூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 2500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.







கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு இப்பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஜூலை 17 ம் தேதி கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 355 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 855 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 19) தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 2500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.






கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 355 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தொடர்ந்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திற்கு 2500 கனஅடி நீர், காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-ஜூலை-201914:39:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni எப்படியோ வந்தாலே காவேரி வாங்கம்மா வாங்க மணல்கொள்ளையால் தமிழ்நாட்டுகாவிரிகதியைப்பார்த்து இறக்கமுடன் நீர் தங்க வேண்டும் என்று வேண்டுகிறேன் தாயே
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
20-ஜூலை-201908:24:56 IST Report Abuse
n.palaniyappan ந.பழனியப்பன், காரைக்கால். நேர்மையாக நடப்பது என்றால் காவேரி நடுவர் மன்றம் கொடுத்த உத்தரவு படி உச்ச நீதி மன்ற உத்தரவுக்கு இணங்க காவேரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசும் நடக்க வேண்டும். பல வருடங்கள் போராடி பெற்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். மேதகு நீதி அரசர்கள் இதை கண்டித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-201901:56:19 IST Report Abuse
ESSEN வருகின்ற நீரை சேமிக்க வழி செய்யட்டும் தமிழக அரசும் மக்களும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X