அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறைமுகமாக ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி: முதல்வர்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (9)
Advertisement
சென்னை, சிசிடிவி, கேமரா, முதல்வர், இ.பி.எஸ்., பழனிசாமி

சென்னை: சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில் நேர்மையாக ஆட்சியை பிடிப்போம் எனக்கூறி வந்த திமுக, மறைமுகமாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது. இதற்காக அக்கட்சி எத்தனை வேலைகளை பார்த்தது என்பது என எங்களுக்கு தெரியும். திமுக முயறசி எதுவும் நிறைவேறவில்லை. மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தால், அதுவும் முடியாது. 2021லும் அதிமுக ஆட்சி தான் அமையும் என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பதில்: செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க, சென்னையில் 2 லட்சத்திற்கு மேல் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர் என்றார். மேலும், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாட்டையும் பாடி பதிலளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஜூலை-201921:18:08 IST Report Abuse
Bhaskaran திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேமரா வரி என்று தெருக்காரர்களிடம் உடன்பிறப்புகள் தாண்டுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201919:05:50 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவைப் பிளவுபடுத்தும் சதியில் கருணாநிதி அவர்கள் இறங்கினார். அதனால் இலவசமாக முதல் அமைச்சர் பதவியைப் பெற்றார். அண்ணா அறிவாலயம் S S ராஜேந்திரனின் அவர்களின் கைப்பணத்தில் வாங்கப்பட்டது. கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கு எல்லாமே இலவசம். எம்ஜிஆர் அவர்கள் 100 ரூபாய் அனுப்பி வசனம் எழுத வரவழைத்தார். இதனால், இந்தக் குடும்பத்திற்கு, அரசியலின் உண்மைத் தத்துவம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தென்பாண்டிநாட்டான் மிக மிக வலிமை கொண்டவன் என்பதை அறியத் தவறிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
19-ஜூலை-201918:30:58 IST Report Abuse
P Karthikeyan நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் 2021ல திமுகவிற்குத்தான் தமிழ் மக்கள் வோட்டு போடுவாங்க. ஏன்னா நீங்க பதவிக்கு வந்து 10 வருஷம் ஆகுதுல்ல. அதைத்தவிர ஜோசியர் ஹேஷியம் சொல்லிட்டாரு. அது நடக்காம போன எப்படி.
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
19-ஜூலை-201921:41:25 IST Report Abuse
Jaya Ramஅவர் சொன்னது சரியோ தவறோ ஆனால் அது நடக்கத்தான் வேண்டும் என தவம் இருக்கிறோம் அப்படிங்கிறார் சுடலை அதற்காக என்ன விலையும் கொடுக்க அவர்கள் தயார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X