பொது செய்தி

இந்தியா

காங்., ஆட்சி பொருளாதாரம்: பிரணாப் தாராளம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement
Economy, Pranab Mukherjee, பொருளாதாரம், பிரணாப் முகர்ஜி, பிரணாப்

புதுடில்லி: 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்திய பொருளாதாரம் உயர உள்ளது. இது தற்போதைய அரசின் சாதனையாக மட்டும் பார்க்க முடியாது. இதற்கு முன்னர் அமைந்த அரசுகளும் அவர்களின் பங்களிப்பை செய்துள்ளன என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, 2024ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்றார்.
இந்த மதிப்பு திடீரென்று சொர்க்கத்தில் இருந்து வந்துவிடவில்லை. இதற்கு முன்னர் போடப்பட்ட வலுவான கட்டுமானத்தினால் தான் அது சாத்தியமானது. ஆங்கிலேய அரசு போட்ட கட்டுமானத்தினால் சாத்தியமாகவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு போடப்பட்ட கட்டுமானம் தான் காரணம்.
காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள், சுதந்திரத்தின்போது, நாடு எங்கு இருந்தது. இப்போது எங்கு இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்க்க தவறுகின்றனர். இந்திய பொருளாதாரத்தை, பூஜியத்தில் இருந்து 1.8 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி வலுவான அடிதளத்தை காங்கிரஸ் அமைத்தது.


latest tamil news




5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை , ஜவஹர்லால் நேரு, மன்மோகன் சிங், நரசிம்மராவ் அரசுகள் அமைத்துள்ளன. ஜவஹர்லால் நேரு, உருவாக்கிய ஐஐடி, இஸ்ரோ, வங்கிகள் ஆகியவை காரணமாக இந்தியா பெரும் வளர்ச்சியடைந்தது.
பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் ஆட்சியின் போதும் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது. இவ்வாறு முந்தைய அரசுகள் அமைத்த அடித்தளம் காரணமாகத் தான், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என நிதியமைச்சர் கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-201908:12:08 IST Report Abuse
ஆப்பு அதுசரி 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு எங்கே வளர்ந்திருக்கு?அதுதான் இலக்குன்னு சொல்றாங்களே தவிர, இன்னும் 2.5 ட்ரில்லியன் அளவுக்குத்தான் இருக்கு. ஆளாளுக்கு அடிச்சு உடறாங்க.
Rate this:
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
21-ஜூலை-201922:09:05 IST Report Abuse
மதுரை வாசு5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்தனும் என்று டார்கெட் வச்சிருக்காங்க. இப்ப புரியுதா பொருளாதார மாமேதை ஆப்பு...
Rate this:
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-201900:56:52 IST Report Abuse
ESSEN ஊழல் இருந்தாலும் ,ஐ.ஐ.டி,பெஹல் ,என் .டி .பி .சி ,ரைல்வேஸ் ,மற்றும் பல நிறுவனங்கள் அவர்கள் காலத்தில்தான் உதித்தது என்பது மறுக்க முடியாது.
Rate this:
Cancel
20-ஜூலை-201900:29:37 IST Report Abuse
கோகுல்,மதுரை அதை தான் நாங்களும் கேட்கிறோம். 60 வருடங்களுக்கு முன் சம அளவு மனிதவளமும், பொருளாதாரமும் கொண்ட சீனா இன்று 13டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்திய சந்தையை விட நான்கு மடங்கு உயர்ந்தது எப்படி? இந்தியாவால் ஏன் அவ்வாறு எட்ட முடியவில்லை. மக்கள் தொகை, சந்தை மதிப்பு இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால் அமெரிக்கா இந்தியாவை காட்டிலும் 28 மடங்கு வலுவான நாடாக உள்ளது. காங்கிரஸால் முன் எடுத்து செல்லப்பட்ட பலவீனமான பொருளாதார கொள்கையும் ஊழலும் தான் நாட்டை சீரழித்துள்ளது. இந்திய இன்னும் பாதுகாப்பு துறையில் அன்னிய நாடுகளை சார்ந்திருக்கும் பெருமையும் காங்கிரசையே சேரும். சீனா பாதுகாப்பு துறையையும் தாண்டி பயணிகள் விமான தயாரிப்பு, போர் கப்பல்கள் விற்பனை வரை சென்று விட்டது. இந்தியா இன்னும் 300 கிமி வேகத்தில் ஓடும் புல்லட் ரயிலுக்கு ஜப்பானை நம்பி இருக்கு வேண்டிய நிலை. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் திறமையாக நுணுக்கமாக கட்ட அமைத்த ஒரே விஷயம் என்றால், அது ஊழல் மட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X