கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : கேரள எம்.பி.,க்களிடம் இருந்து தமிழக எம்.பி.,க்கள் பெரிய பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் ஒன்று கூடி, தங்களின் மாநிலம் சார்ந்த பிரச்னையை எழுப்புவர். ஒருவருக்கொருவர் உதவுவர்.





தமிழகம் அல்லது மற்ற தென் மாநில எம்.பி.,க்கள் இவர்களை போல் இல்லை. அவர்களுக்குள் கட்சி சார்ந்த அரசியல் பிரிவினை அதிகமாக இருக்கும். அவர்கள் சார்ந்த மாநில பிரச்னைகளை எழுப்புவதில் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பு இருப்பதில்லை.

கேரளாவை பொருத்தவரை பா.ஜ.,விற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., கிடையாது. இருந்தாலும் அரசு பிரதிநிதியாக இருக்கும் வி.முரளீதரன், மத்திய இணையமைச்சராக உள்ளார். இவரும், கேரளாவை சேர்ந்த மற்ற எம்பி.,க்களுடன் இணைந்து மாநில பிரச்னையை மத்திய அரசிடம் முன்வைப்பார்.





முரளீதரன், காங்., மூத்த எம்.பி.,யும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியிடம், மற்ற கேரள எம்.பி.,க்களை சந்தித்து சமாதானப்படுத்த கோரிக்கை வைத்துள்ளார்.

மொத்தம் 29 எம்பி.,க்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், கேரளாவில் வசிக்கும் மற்ற மாநில மக்களின் பிரச்னைகளை தீர்க்க கேரள எம்.பி.,க்கள் ஒருங்கிணைத்து அவரின் அமைச்சகத்தின் மூலம் உதவ வேண்டும் என்பதும் ஒன்று. இது போன்ற உதவிகளை செய்வது தனக்கு எளிமையானது தான் என முரளீதரனும் கூறி உள்ளார்.




அனைத்து எம்.பி.,க்களும் தங்களின் தொகுதி மக்களின் பிரச்னைகளை எப்போதும் நினைத்து வைத்துக்க கொள்ள வேண்டும் என மோடி விரும்புகிறார். இதற்கான முயற்சியை முரளீதரன் செய்து வருவதை புரிந்து கொண்ட பிரதமர் மோடி, அவரை பாராட்டி உள்ளார்.




அரசியல்வாதிகள் தங்களுக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் அவையில் சண்டையிட காத்துக் கொண்டிருப்பார்கள். கேரள எம்.பி.,க்களை போன்று தமிழக எம்.பி.,க்கள் மக்களின் பிரச்னைகளை முன்வைப்பதில்லை. மக்களின் பிரச்னைகளை மறந்து விட்டு, தாங்கள் திமுக.,வை சேர்ந்தவர்கள் அல்லது அதிமுக.,வை சேர்ந்தவர்கள் என்பதை மட்டுமே நினைவில் கொள்கிறார்கள். அந்த கட்சி தலைவர்களும் மக்கள் பிரச்னைகளில் எம்.பி.,க்கள் கவனம் செலுத்த அனுமதிப்பதில்லை.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-ஜூலை-201909:58:53 IST Report Abuse
THENNAVAN இஸ்ரேலின் மொஸாட் படை அது ,மலையாளிகளுக்கு ,மொஸாட் படைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை ,மத்திய அரசின் நிதியை எந்த வழியிலாவது பயன்படுத்துவதே அவர்களின் தொழில்,அண்டை மாநிலங்களின் மீது கரிசனம் இல்லாத தேச துரோகிகள் மலையாளிகள் ,அவர்களின் இந்த ஒற்றுமை அடுத்தவர்களின் பங்கை பிடுங்கி நாம சாப்பிடுவம் அதுதான் அவர்களின் கொள்கை ,இப்படிப்படட ஒற்றுமை கருணாநிதிக்கு இருந்தது அது அவரது குடும்பத்திற்கு மட்டுமே பயனளிக்கும்படி கருணாநிதி பார்த்துக்கொண்டார் ,ஏனெனில் அவரது குடும்ப உறுப்புகள் பதவியை வேறு யாருக்கும் விடாமல் அவர்கள் மட்டுமே அனுபவிக்க இந்த ஒற்றுமையை பயன்படுத்திக்கொண்டார்.அதுபோலத்தான் மலையாளிகளும் .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூலை-201918:09:18 IST Report Abuse
Pugazh V நம்ம ஏரியா போஸ்ட்மாஸ்டர் மற்றும் போஸ்ட்மேனா ஹிந்திக்காரர் வந்திருக்கும் வாய்ப்பை முளையிலேயே கிள்ளி எறிந்து தமிழர்கள் உரிமை காத்த தீம்கா எம்.பிக்களைப் பாராட்ட மனமில்லாதவர்கள் நிலை கண்டு பரிதாபமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூலை-201918:06:51 IST Report Abuse
Pugazh V திராவிட இனத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் பிற இனத் தமிழர்களுக்கு தன்மானம் சூடு சொரணை இல்லை என்கிற நம்பிக்கை. எனவே இங்கே திராவிட இனத்தவரை யும் தமிழர்களையும் அவமானப்படுத்தி ஒரு குறிப்பிட்ட இனத்தார் கருத்து என்ற பேரில் சுய அவமதிப்பை பதிவிட்டிருக்கின்றனர். சும்மா சும்மா "கொள்ளை" என்று பிதற்றுவதில் பயனில்லை. கொள்ளை அடிக்கிறவனை, ஜெயலலிதா வை தூக்கி போட்டார்கள் பாருங்கள் அது போல உள்ளே போட வையுங்கள். முடியலை ன்னா வாயை.மூடுங்கள். முடிப்பதற்குள் இன்னும் ஒன்று. அதென்ன தீம்கா பற்றி மட்டுமே விமர்சனம்?? அதிமுக பற்றி ஏதுமில்லை?? அந்த எம். பி.க்கள் சினிமா பாடல் பாடி தமிழகத்தின் குரலை ஒலிக்க வைத்ததாலா? / வாசகர்கள் சிந்தனை க்காக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X