பொது செய்தி

இந்தியா

அகதிகளின் தலைநகரா இந்தியா: மத்திய அரசு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகர் ஆக முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.latest tamil news20 ம் நூற்றாண்டில் வங்கதேசத்தினர் அதிக அளவில் மாநிலமாக அசாம் உள்ளது. சட்ட விரோதமாக பலர் குடியேறி வருவதாக எழுந்த விவகாரத்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின் படி முதல் தேசிய குடியுரிமை பதிவு வரைவை 2017 ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2018 ம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அசாம் அரசு வெளியிட்டது. தேசிய குடியுரிமை பதிவிற்கு (என்ஆர்சி) விண்ணப்பித்த 3.29 கோடி பேரில், 1.9 கோடி பேரின் பெயர்கள் அகற்றப்பட்டன.


latest tamil news


இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகி வாதிட்ட சோலிசிடர் ஜெனரல் துசர் மேத்தா, அசாம் தாக்கல் செய்த வரைவில் சட்ட விரோதமாக குடியேறிய லட்சக்கணக்கானவர்களின் பெயர்களும் தவறுவதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இறுதி பட்டியல் தயாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இந்தியா உலக நாடுகளின் அகதிகளின் தலைநகராக முடியாது என்றார்.

இறுதி என்ஆர்சி பட்டியலை தயாரிக்க ஜூலை 31 வரை விதிக்கப்பட்ட கால அவகாசத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் என மத்திய மற்றும் அசாம் அரசுகள் கேட்டுள்ளன. 20 சதவீதம் மக்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதாகவும், வங்கதேச எல்லையோரம் வசிக்கும் மக்கள் குறித்த விபரங்களை உள்ளூர் அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் கோர்ட்டில் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
19-ஜூலை-201923:10:04 IST Report Abuse
Raj யாரு அவர்களை உள்ளே விடுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு நிச்சயம் அரசியல் வியாதிகள் அதன் பலனை அடையத்தான் இந்த ட்ராமா, இனி இதுமாதிரி நடக்க கூடாது .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
19-ஜூலை-201920:28:41 IST Report Abuse
Indhuindian Absolutely correct statement and affidavit by the Central Government. Congress governments and its cohorts in states with a lust for power played only on vote bank politics with scant respect for national integrity and sovereignty resulting in flux of millions of people from Bangladesh and Myanmar. They indulge in all sorts of anti national and terrorist activities. The cry of the hour is National Register of Citizens in every state and throwing out all illegal immigrants from Bangladesh, Myanmar and Sri Lanka.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201919:08:54 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam மன்னிக்கவும், திபெத்தியரின் கூடாரமாகிவிட்டது.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
19-ஜூலை-201920:51:54 IST Report Abuse
Darmavanதிபெத்தியர்கள் தீவிரவாதிகளில்லை.அராஜக ஆட்சியினால் வெளியேற்றப்பட்ட அகதிகள்.வாங்க தேச மூர்க்கர்கள்/.ரோகின்காஸ் தீவிரவாதிகள்....
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201921:16:33 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagamஅப்படியென்றால், பெரும்பாலான இலங்கைத் தமிழ் அகதிகள்? Darmavan அவர்களே, தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். தமிழகம் இந்தியாவில் தானே இருக்கின்றது? திபெத்தியரை விடத், தமிழன் எதில் குறைந்தவன்?...
Rate this:
R.Subramanian - Chennai,இந்தியா
20-ஜூலை-201900:31:00 IST Report Abuse
R.Subramanian Vaithilingam Ahilathirunayagam இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் குண்டு வைத்து தமிழக மக்களை கொன்று இருக்கிறார்கள், தமிழகத்தில் வைகோ, திருமுருகன் காந்தி, சீமான் போன்ற அரசியல்வாதிகள் மூலம் பிரிவினையை தூண்டி கொண்டு இருக்கிறார்கள். திபெத் மக்கள் அது போன்ற காரியங்களை செய்தது இல்லை, உலக அளவில் இந்தியாவின் நலனுக்காக திபெத் மக்களும் பாடுபட்டு இருக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் முடிந்தளவுக்கு இந்தியாவிற்கு எதிரான செயல்களை தான் இது வரையில் செய்து இருக்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X