கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (29+ 61)
Advertisement
கெடு, கர்நாடகா, முதல்வர், குமாரசாமி, கவர்னர், தீர்மானம், பா.ஜ., பாஜ

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வஜூபாய் வாலா, முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனிடையே, திங்கட்கிழமையும் நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதம் தொடரும் என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.


காலக்கெடு முடிந்தது


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.க் கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சபாநாயகர் அறிவித்தபடி கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18) பகல் 11:15 மணிக்கு கூடியது. தன் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். நேற்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். இதனை ஏற்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. இதனையடுத்து பா.ஜ., சார்பில், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர்.






கவர்னரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று(ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கெடுவுக்குள் ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனையடுத்து, இன்று மாலை 6 மணிக்குள் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் வஜூபாலா , மீண்டும் மற்றொரு கடிதத்தை அனுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. ஆனால், 6 மணி காலக்கெடு முடிந்தும் இன்றும்(ஜூலை 19) நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கவில்லை.


விவாதம் தொடரும்


கவர்னர் கடிதம் குறித்து குமாரசாமி கூறுகையில், கவர்னரின் இரண்டாவது கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது. கவர்னரின் கடிதத்தில் இருந்து தனது அரசை காப்பாற்ற வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும். டில்லி முடிவு செய்யக்கூடாது என்றார்.






தொடர்ந்து அவர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், திங்கட்கிழமையும் விவாதம் தொடரும் எனக்கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., மாநில தலைவர் எடியூரப்பா, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவேன் எனக்கூறியுள்ளார்.







முறையீடு



கவர்னரின் காலக்கெடு விதித்த அனுப்பிய கடிதம், அரசியல்சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி, முதல்வர் குமாரசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


காங்கிரஸ் வழக்கு



இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் குண்டுராவ், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. 15 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை கூடாது என்ற உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை. இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளுக்கு, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29+ 61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூலை-201914:27:29 IST Report Abuse
இந்தியன் kumar பதவி வெறி ஒரு சில அரசியல்வாதிகளை பாடாய் படுத்துகிறது
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூலை-201914:24:20 IST Report Abuse
இந்தியன் kumar ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தி ஆறு மாத்திட்க்குள் மறுதேர்தல் நடத்த உத்தரவு இடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூலை-201913:33:25 IST Report Abuse
தமிழன் நம்ம ஊரு கூமுட்டைகள் பதவியை கெட்டியாக பிடித்துக்கொண்டு உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்ததும் .....மஜத எதிர்த்து போட்டியிட்டு பின்னர் பதவி சுகத்துக்காக அதே மஜத கூட சேர்ந்து ஆட்சி அமைத்தது பிடிக்காமல் பதவி வேண்டாம் என்று ராஜினாமா செய்தவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X