பொது செய்தி

இந்தியா

கேரளா:கோழிக்கோடு, இடுக்கியில் 14 செ.மீ மழை கொட்டியது

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை- ஜூலை 19) காலை 8.30 மணி வரை, முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.







மேலும்,மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 12 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் பொய்த்த நிலையில் தற்போது தீவிரமடைந்து வருவதால், இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளிக்கிழமை) கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது.







சிறிய நிலச்சரிவுகள்



இடுக்கி மாவட்டத்தில் எட்டுமனூர்-பீருமேடு சாலையில் மழையினால் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்தை லேசாக பாதித்தன.






ஐந்து நாள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், இடைவிடாத மழையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்."நேற்று முதல் பெய்த கனமழையால், பம்பா பகுதி வெள்ளத்தில் மூழ்கியது, ஆனால் இப்போது தண்ணீர் குறைந்து வருகிறது" என்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






இந்நிலையில் ஜூலை 22 வரை இடுக்கி மற்றும் கோழிக்கோடு வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 20 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
20-ஜூலை-201909:40:38 IST Report Abuse
agni இங்கு ஆட்சி செய்து இயற்கை ஆதாரங்களை அழித்து திருடிய ஒரு கூட்டம் .அவர்களாலோ என்னவோ இங்கு மக்களும் இயற்கை கண்டு கொள்ளாமல் வளர்க்காமல் விட்டு விட்டனர்.அதனால் இங்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமா கேரளாவை நோக்கி பெய்கிறது.அந்த மக்கள் மற்றதில் சரியோ , தவறோ இருந்தாலும் விவரமா அதிக இயற்கையோடு இணைந்து இருக்காங்க .நமக்கு இங்கு வர வேண்டிய மழை மொத்தமா ஒரு சிறிய பரப்பளவில் அந்த இயற்கையை நோக்கி மொத்தமா போறதால என்னவோ அங்கு பெரிய வெள்ளம் பாதிப்பு வருதுன்னு நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-ஜூலை-201907:39:47 IST Report Abuse
blocked user சென்றமுறை அச்சன்களை மழை சுளுக்கெடுத்தது போல இந்த முறையும் சுளுக்கெடுக்காமல் இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
19-ஜூலை-201921:05:19 IST Report Abuse
Jaya Ram அடேங்கப்பா எங்க பெரியாறு ஆணை நிரம்பலப்பா நாங்க தண்ணீர் திறந்து விடலைப்பா போனதடவை நீங்கள் பொய் பரப்பினீர்களே பெரியாறு அணையினால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று வேண்டாம் அந்த இழி செயல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X