கர்நாடக சட்டசபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு | Dinamalar

கர்நாடக சட்டசபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (12)
Share

பெங்களூரு: கர்நாடக சட்டசபை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.



latest tamil news



கர்நாடக மாநிலத்தில் பரப்பரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க மாநில கவர்னர் முதல்வர் குமாரசாமிக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார். இரண்டு முறையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.


latest tamil news




இந்நிலையில் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த ஆளுங்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆளும் கூட்டணி அரசின் கோரிக்கைக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ், ம.ஜ.த.,கட்சியினர்சபையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சபாநாயகர் திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைத்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X