பினாமி பணமா?| Dinamalar

'பினாமி' பணமா?

Added : ஜூலை 19, 2019
Share
'பினாமி' பணமா?

'பினாமி' பணமா?
லோக்சபா தேர்தல் செலவுகளுக்காக, பா.ஜ., 2,000 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த பணத்தை வைத்து தான், ஏழைகளின் ஓட்டை வாங்கியது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய, மக்கள் ஆவலாக உள்ளனர். இது 'பினாமி' பணமா? நீங்கள் நேர்மையானவர்கள் என்றால், உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள், அரசியலுக்கு வருவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தனர். இப்போது எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்பதை, விசாரிக்க வேண்டும்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
வானில் இருந்து விழவில்லை

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்து பேசும்போது, 2024க்குள், இந்திய பொருளாதாரம், 350 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றார். இது திடீரென வானத்தில் இருந்து வந்து விழுந்துவிடவில்லை. சுதந்திரத்திற்கு பின் அமைந்த அரசுகள் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததால், இது சாத்தியமானது. காங்கிரசின், 55 ஆண்டுகால ஆட்சியை விமர்சிப்பவர்கள், சுதந்திரத்தின் போது நாடு எங்கு இருந்தது, இப்போது எங்கு இருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.பிரணாப் முகர்ஜிமுன்னாள் ஜனாதிபதி, காங்கிரஸ்
மக்கள் முன் நிறுத்துவேன்

போலாவரம் திட்டத்தை நிறைவேற்றுவதில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்படும். இது பற்றி, நீர் பாசனத்துறை அமைச்சர், மூன்று நாட்களாக விளக்கம் அளித்து வருகிறார். இத்திட்டத்தை பற்றி பேசினால், தெலுங்கு தேசம் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். சந்திரபாபு நாயுடு, தன் சுயநலத்துக்காக, இந்த சபையை பயன்படுத்துகிறார். அவரது அரசு செய்த ஊழல்களை விரைவில் அம்பலப்படுத்தி, மக்கள் முன் நிறுத்துவேன்.ஜெகன்மோகன் ரெட்டிஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X