தேசிய குடியுரிமை இறுதிப் பட்டியல் : காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை

Added : ஜூலை 19, 2019
Share
Advertisement

புதுடில்லி, தேசிய குடியுரிமை பதிவேட்டில், ஏராளமான பெயர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன.அதனால், அதன் இறுதிப் பட்டியலை, ஜூலை, 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என, அசாம் மற்றும் மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முடிவுஅண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, அதன் அருகில் உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் பலர், ஊடுருவி வசித்து வருவதை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, தேசிய குடியுரிமை பதிவேட்டை அரசு வெளிட்டது. இதில், அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவி வாழும் வங்கதேச அகதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த பட்டியலின் இறுதி வடிவத்தை, ஜூலை, 31க்குள் சமர்ப்பிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி, ஆர்.எப்.நாரிமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அசாம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:

தேசிய குடியுரிமை பதிவேட்டில், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், லட்சக்கணக்கான பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன; பல பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கால அவகாசம்எனவே, 20 சதவீத பட்டியல், மீண்டும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பணி முடிய சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியாவை, அகதிகளின் தலைநகராக மாற்ற அனுமதிக்க முடியாது.எனவே, இறுதிப் பட்டியல் தாக்கல் செய்ய, ஜூலை, 31 வரை வழங்கப்பட்ட காலக்கெடுவை, நீட்டித்து உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X