பதிவு செய்த நாள் :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு :
9மாதத்தில் முடிக்க உத்தரவு

புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, 9 மாதங்களில் முடிக்கும் படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பாபர் மசூதி ,இடிப்பு, வழக்கு, சுப்ரீம் கோர்ட், முடிக்க, உத்தரவு


உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கடந்த, 1992ல், இங்குள்ள அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்

பட்டது.இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்துவிசாரணை, லக்னோ, சி.பி.ஐ., சிறப்பு நீதி மன்றத்தில் நடக்கிறது.இந்த வழக்கின் விசாரணையை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கும்படி, 2017 ஏப்ரலில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, மேலும் ஆறு மாதம் அவகாசம் அளிக்கும்படி,சிறப்பு நீதி மன்றம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எப். நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை, 9 மாதங்களுக்குள்

Advertisement

முடிக்கும் படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் பதவிக் காலம், செப்டம்பருடன் முடிவடைவதால், அதை நீட்டிக்க, போதிய நடவடிக்கை எடுக்கும்படி, உ.பி., மாநில அரசுக்கும் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஜூலை-201908:53:44 IST Report Abuse

Natarajan Ramanathanஅங்கு இருந்த ராமர் கோவிலை இடித்து அதன் மீதுதான் பாபர், மசூதி கட்டினான் என்பது வரலாறு..…. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதை விசாரிப்பது?

Rate this:
20-ஜூலை-201908:15:13 IST Report Abuse

ஆப்புவாய்தாவுக்கு வாய்தா.. அவகாச நீட்டிப்பு... தீர்ப்பு பூஜ்ஜியம்

Rate this:
blocked user - blocked,மயோட்
20-ஜூலை-201907:53:07 IST Report Abuse

blocked userஇன்னும் ஒரு நாலு தலைமுறைக்கு இழுத்தடிப்பார்கள். ஆக்கிரமித்தவனுக்கு சொத்து சொந்தம் என்று சொல்லும் உயரிய நீதித்துறை வேறு என்ன சொல்லும் என்று எதிர்பார்க்கமுடியும்?

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X