பதிவு செய்த நாள் :
சிறுபான்மையினரை வரையறுக்க :
உதவி கேட்கிறது உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'மாநில அளவிலான மக்கள் தொகை அடிப்படையில் தான், சிறுபான்மையினர் வரையறுக்கப்பட வேண்டும் என கோரும் பொதுநல வழக்கில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சிறுபான்மையினர்,உதவி,உச்சநீதிமன்றம்



பா.ஜ.,வைச் சேர்ந்த, வழக்கறிஞர், அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், கடந்த பிப்ரவரியில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:


தேசிய அளவிலான மக்கள் தொகை அடிப்படை யிலேயே, சிறுபான்மையினர் வரையறுக்கப் படுகின்றனர்.தேசிய அளவில், முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்ஸி இனத்தவர் மட்டுமே, சிறுபான்மையின ராக அறிவிக்கபட்டுள்ளனர்.தேசிய சிறுபான்மை யினர் நல ஆணையம்,



26 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த இந்த உத்தரவு, தற்போதைய மக்கள் தொகை நிலவரத்துக்கு உகந்தது அல்ல. ஏழு மாநிலங்களில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தும், அதற்கான பலனைஅவர்களால் அனுபவிக்க முடியவில்லை.


கடந்த, 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கீட்டுப் படி, பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்கள்; மிசோரம், நாகாலாந்து, மேகாலாயா ஆகிய மாநிலங்களில், கிறிஸ்துவர்; லட்சத் தீவுகள் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர்.

இந்த மாநிலங்களில், ஹிந்துக்கள் மிகக்குறைவாக இருந்தாலும், சிறுபான்மையினருக் கான நலத் திட்டங்களை அனுபவிக்க முடியாது. அதே நேரத் தில், பெரும்பான்மையாக வசிப்பவர்கள், சிறு பான்மையினர் நலத்திட்டங்களை அனுபவிக்கின் றனர். இது, அரசியலமைப்பு சட்டப்படி, ஹிந்துக் களுக்கான அடிப்படை உரிமையைபறிக்கும் செயல்.

எனவே, தேசிய அளவிலான மக்கள் தொகை அடிப்படை யில், சிறுபான்மையினர் வரையறுக்கப் படுவதை ரத்து செய்து, மாநில அளவிலான மக்கள்

Advertisement

தொகை கணக்கீட்டுப்படி, சிறுபான்மையினர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியிருந்தார். இந்த மனு மீது, தேசிய சிறுபான்மை நல ஆணையம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தது.இ ந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அப்போது, 'மாநில அளவிலான மக்கள் தொகை அடிப்படையில், சிறுபான்மையினர் யார் என்பதை அறிவிக்க கோரும் பொதுநல வழக் கில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால் தலையிட்டு உதவ வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
20-ஜூலை-201920:48:14 IST Report Abuse

 Shake-sphereசிறுபான்மையினர் பெரும்பான்மையினர் சமாச்சாரமே இருக்க கூடாது மனிதர்கள் என்ற அடிப்படையிலேயே எல்லாம் இருக்க வேண்டும்

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஜூலை-201920:45:18 IST Report Abuse

r.sundaramமத்திய அரசு மக்களுக்கு எந்த நலத்திட்டங்கள் கொண்டு வந்தாலும் அது மாநில அரசு மூலமாகவே மக்களுக்கு பொய் சேருகிறது. ஆதலால் மாநில அளவில் யார் சிறுபான்மையினர் என்று முடிவு கட்டி அதன் படியே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூலை-201920:33:27 IST Report Abuse

தமிழ்வேல் முதலாக, ஜாதி, மதத்தை ஒழிக்க அனைத்து வழிகளையும் தேட வேண்டும். ஜாதிமதம் ஊழலுக்கும், முறையற்ற தேர்தலுக்கும், கலவரத்திற்கும், பிரிவினைக்கு வழிவகுக்கின்றது. மத, ஜாதி வாரியாக சலுகைகளுக்காக மட்டுமே சிறுபான்மை பெருபான்மை என பிரிப்பதை தவிர்த்து அவரவர் வருமானத்தை (ஏழ்மையை) வைத்தே சலுகைகள் தரப்படவேண்டும்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X