பதிவு செய்த நாள் :
ஆர்.டி.ஐ., சட்ட திருத்த மசோதா
எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி: தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட, மத்திய தலைமை தகவல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும், சட்ட திருத்த வரைவு மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

 ஆர்.டி.ஐ., சட்ட திருத்த, மசோதா,எதிர்கட்சிகள்,கடும் ,எதிர்ப்பு


இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன; திரிணமுல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஜிதேந்திர சிங், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் தாக்கல் செய்தார். சட்ட திருத்தப்படி, தகவல் ஆணையரின் ஊதியம் மற்றும் அதிகாரம் குறைக்கப்படுகிறது.இந்த மசோதாவுக்கு, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது குறித்து பேசிய அமைச்சர் சிங், ''தகவல்

ஆணைய நிர்வாகத்தை முறைப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் அரசு திட்ட மிட்டு உள்ளது. அதற்காகவே, இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.லோக்சபா, காங்., தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''இதன் மூலம், மத்திய தகவல் ஆணையரின் சுதந்திரமான செயல்பாட்டுக்குஅச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது,'' என்றார்.

காங்., மூத்த எம்.பி., சசி தரூர், ''இது, சட்ட திருத்த மசோதா அல்ல. தகவல் அறியும் உரிமை சட்டத் தையே நீக்கும் மசோதா,'' என, குற்றம் சாட்டினார். அனைத்திந்திய மஜ்லிஸ் - இ - இட்டாஹாதுல் முஸ்லிமின் கட்சி, எம்.பி., அசாதுதின் ஓவைசி, ''இந்த சட்ட திருத்த வரைவு மசோதா, அரசியல் அமைப்புக்கும், பார்லிமென்டுக்கும் மிரட்டல் விடுப்பது போல இருக்கிறது,'' என்றார்.திரிணமுல் காங்., - எம்.பி.,க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு, நடத்திய ஓட்டெடுப்பில், 224 பேர் ஆதரவு அளித்தனர்.திரிணமுல் மற்றும் மஜ்லிஸ் - இ - இட்டாஹாதுல் முஸ்லிமின் கட்சி வெளிநடப்புசெய்தன.

திருநங்கையர் மசோதா


திருநங்கையர் உரிமை, பாதுகாப்பு சட்ட மசோதாவை, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், தாவர்சந்த் கெலாட், லோக்சபா வில் நேற்று தாக்கல் செய்தார்.இதன் மூலம், சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் அவர்களுக்கு

Advertisement

உரிய உரிமைகள் பாதுகாக்கப்படும்.இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்., - எம்.பி., சசி தரூர் தலைமையில், அக்கட்சி, எம்.பி.,க்கள், கர்நாடக சட்டசபை விவகாரத்தை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். பின், வெளிநடப்பு செய்தனர்.

முறைப்படுத்தப்படாத பண முதலீடுகளை தடை செய்யும் சட்ட மசோதாவை, நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தாக்கல் செய்தார்.மனித உரிமை மசோதா மனித உரிமை ஆணைய சட்ட திருத்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர், நித்யானந்த் ராய், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

''சட்ட திருத்தப்படி, தேசிய மற்றும் மாநில, மனித உரிமை ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகம் மற்றும் நிதி விவகாரத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்,'' என, அமைச்சர் ராய் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-ஜூலை-201914:52:22 IST Report Abuse

Needhiyin Pakkam Nil ஆமாம் பின்ன ஆர்.டி.ஐ. யில் போட்டு 20 லட்சம் வாக்கு இயந்திரங்கள் வாங்கினீர்களே அதெல்லாம் எங்கே என்று கேட்டால் உண்மையான தேசபக்தர்கள் உங்களை சும்மா விடுவார்களா, அதான் ஆர்.டி.ஐ. அதிகாரியின் அதிகாரத்தை குறைத்து சில முக்கியமான உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள கூடாது என்று தடுக்க நினைக்கிறார்கள் ..................

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூலை-201912:25:32 IST Report Abuse

Cheran Perumalதகவல் அறியும் சட்டம் பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு தனக்கு சம்பந்தம் இல்லாத பல விஷயங்களையும் அறிந்து அதை வைத்து சம்பாதிப்பவர்கள் அதிகம்.

Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-201912:22:03 IST Report Abuse

TAMILANஎல்லாம் இரு தேசிய கட்சிகளின் நாடகம்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X