பதிவு செய்த நாள் :
அதிரடி!
காங். பொதுச் செயலர் பிரியங்கா கைது :
தடையை மீறியதால் உ.பி., போலீஸ் நடவடிக்கை

லக்னோ: உத்தர பிரதேசத்தில், சொத்து தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பழங்குடியினருக்கு, ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, கைது செய்யப்பட்டார். தடை உத்தரவை மீறியதால், பிரியங்கா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

காங்., பொதுச் செயலர், பிரியங்கா, கைது, அதிரடி, உ.பி., போலீஸ், நடவடிக்கைஉ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள, சோன்பத்ரா மாவட்டத்தில், கோர்வால் என்ற, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் தலைவரான, யாக்யா தத்துக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே, நிலம் தொடர்பான விவகாரத்தில் தகராறு இருந்து வந்தது.


29 பேர் கைது


சமீபத்தில், இந்த தகராறு, பெரிய அளவில் வெடித்தது. யாக்யா தத்தின் ஆதரவாளர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் கொல்லப் பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, யாக்யா தத், அவரது சகோதரர் உட்பட, 29 பேர் கைது செய்யப் பட்டனர். இதனால், உ.பி.,யில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பழங்குடியின மக்களை சந்தித்து, ஆறுதல் கூறுவதற்காக, நேற்று, உ.பி.,க்கு வந்தார். முதலில், வாரணாசிக்கு வந்த அவர், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரை சந்தித்து, ஆறுதல் கூறினார்.இதையடுத்து, சோன்பத்ரா

மாவட்டத்துக்கு சென்று, அங்குள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க புறப்பட்டார்.அப்போது, நாராயண்பூர் என்ற இடத்தில், பிரியங்காவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை அனுமதிக்க வில்லை.


இதையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன், தரையில் அமர்ந்து, பிரியங்கா, தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டார்.அவரையும், போராட்டத் தில் ஈடுபட்ட மற்றவர்களையும், சுனார் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால், சோன்பத்ரா மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.


ஆறுதல்இது குறித்து, பிரியங்கா கூறியதாவது:துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவே, சோன்பத்ராவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். என்னுடன், நான்கு பேரை மட்டுமே அழைத்துச் செல்வேன் என, போலீசாருக்கு உறுதி அளித்திருந்தேன். ஆனால், போலீசார் அனுமதி மறுக்கின்றனர். எங்களை கைது செய்துள்ளனரா என்பதையும் தெரிவிக்க மறுக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.


இது குறித்து போலீசார் கூறுகையில், 'சோன்பத்ரா மாவட்டத்தில், தடை உத்தரவு அமலில் உள்ளது; இதை மீறியதால் தான், பிரியங்கா மீது நடவடிக்கை எடுத்தோம்' என்றனர்.இதற்கிடையே, சோன்பத்ரா கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய பழங்குடியினர் ஆணைய குழு, நாளை மறுநாள், உ.பி.,க்கு வரவுள்ளது. ஆணையத்தின் தலைவர், நந்த குமார் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.


இது குறித்து, பழங்குடியினர் நல ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'சோன்பத்ரா

Advertisement

மாவட்டத்தில், சர்ச்சைக்குரிய இடத்தில், பழங்குடியின மக்கள், பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். 'அவர்களுக்கு, அந்த நிலத்தை கொடுக்காமல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சரியான விஷயம் அல்ல' என்றனர்.


ராகுல் கொதிப்பு


பிரியங்கா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள, ராகுல் கூறியதாவது: உ.பி., மாநில, பா.ஜ., அரசு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது, எந்த வகையில் தவறு என தெரியவில்லை. பிரியங்காவை, சட்டவிரோதமாக கைது செய்து உள்ளனர். உ.பி.,யில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களால், அம்மாநில மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலரான, ஜோதி ராதித்யா சிந்தியா கூறுகையில், ''உ.பி., மாநில அரசின் நடவடிக்கை, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''கொலை, கொள்ளை சம்பவங்களால், உ.பி., மாநிலம், குற்றங்களின் மையமாக மாறி விட்டது. பிரியங்காவை கைது செய்வதன் மூலம், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை, மூடி மறைத்து விட முடியாது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-ஜூலை-201923:25:41 IST Report Abuse

balபிஹாரில் குழந்தைகள் இறந்தனர்...அங்கு போகவில்லை...அஸ்ஸாமில் வெள்ளம் அங்கும் போகவில்லை....அதி வரதர் தரிசன கூட நெரிசலில் இறந்தனர்...அதற்கும் போகவில்லை...இந்த பெண்மணிக்கு...எப்படியாவது UP ஆளனும்...அதற்காக எல்லா நாடகமும் பண்ணும்...

Rate this:
c.k.sundar rao - MYSORE,இந்தியா
20-ஜூலை-201911:50:11 IST Report Abuse

c.k.sundar raoDuring UPA rule when PC was FM,he told parl that dispute had Robert Vadra and DLF was between two individuals,why should govt or a party should interfere, the same yard should be applied here also because the dispute is between two groups and scamgress party should not poke its nose in these matter. gandi scion wants to politicise the issue and enact drama for to remain in politics or else people will forget scamgress and gandi scion.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூலை-201910:31:49 IST Report Abuse

தமிழ் மைந்தன்இந்த நில பிரச்சினை காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்பது இன்னுமா தெரியவில்லை......

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X