பொது செய்தி

தமிழ்நாடு

மாலை 6 மணிக்கு மேல் அத்தி வரதர் வி.ஐ.பி.,தரிசனம் ரத்து:

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
வி.ஐ.பி., தரிசனம், அத்தி வரதர், தரிசனம், தள்ளுமுள்ளு மாற்றம்

காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி, நான்கு பேர் இறந்ததை அடுத்து, வி.ஐ.பி., தரிசனம், மாலை, 6:00 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், இன்றைய(ஜூலை 19) தரிசனத்தில், முதியவர் ஒருவர் இறந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும், அத்தி வரதரை தரிசிக்க, தினமும், லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.நேற்று (ஜூலை 18) இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறலால், நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால், மூலவர், வரதராஜ பெருமாள் தரிசனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வி.ஐ.பி., தரிசனம், இன்றில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு மேல் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார்.

நான்கு பேர் இறப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால், இன்று, பக்தர்கள் கூட்டம் குறைந்திருந்தது. எனினும், அத்தி வரதரை தரிசித்து விட்டு, வெளியே வந்த, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 70, என்பவர் இறந்தார்.இதுவரை, அத்தி வரதரை தரிசிக்க வந்து, ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை கல் விழுந்து, அத்தி வரதர் தரிசனத்திற்கு வந்த குரோம்பேட்டை சுரேஷ் மகள் பிரேமிகா, 5, கால் எலும்பு முறிந்தது. பிரேமிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு வசதியாக, ஆன்லைனில், 300 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்யும் வசதியை, நேற்று முதல், அறநிலையத் துறை துவக்கியுள்ளது. 500 ரூபாய் கட்டண பாஸ், ஏற்கனவே உள்ளது.


latest tamil news
அராஜகம் செய்யும் ஏ.எஸ்.பி.,


வரதராஜ பெருமாள் கோவில் உள்ளே, செய்தி சேகரிக்க செல்வதற்காக, நிருபர்களுக்கு, கலெக்டர், பொன்னையா, 'பாஸ்' வழங்கியுள்ளார். வி.ஐ.பி., தரிசனம் வழியாக, சென்ற நிருபர்களை, உள்ளே செல்ல விடாமல், ஸ்ரீபெரும்புதுார் ஏ.எஸ்.பி., ராஜேஷ்கண்ணா தடுத்து நிறுத்தினார். ''பாஸ் வைச்சிருக்கியா... டோனர் பாஸ் வழியாக போங்க,'' என்றார்.

அப்போது, பாஸ் இல்லாத பலரை, வி.ஐ.பி., என்ற பெயரில், உள்ளே செல்ல, அவர் அனுமதித்தார். இதை, நிருபர்கள் கேட்டதற்கு, 'அதை கேட்க நீ யார். நிருபர்னா எல்லாத்தையும் கேள்வி கேப்பியா' என, பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசினார். இதனால், ஏ.எஸ்.பி.,க்கும், நிருபர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.பின், அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி., மாணிக்கம், நிருபர்களை சமாதானப்படுத்தி, கோவிலுக்குள் அனுப்பினார். இது குறித்து, மாவட்ட கலெக்டரிடமும், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், எஸ்.பி.,யிடம் தெரிவித்து, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
20-ஜூலை-201912:42:59 IST Report Abuse
Yezdi K Damo விஐபி தரிசனம் சனி மற்றும் ஞாயிறு மட்டும் என்று மாற்றினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .குறைவான வசதிகளை பற்றி பத்தர்கள் எழுதும் கருத்துக்களை படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது .கோவில் நிர்வாகமும் ,காஞ்சிபுரம் நகராட்சியும் உடனடி தீர்வு காண வேண்டிய அவசியத்தை உணரவேண்டும் .
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி அத்திவரதரைக் காண லஷ்சத்திற்கு மேல் மக்கள் வரும் நிலையில் உள்ளே சிற்சில இடங்களை கடக்கும் போது சினிமா தியேட்டர்களில் உள்ள கழிவறை போல நாற்றம் அடிக்கிறது. தாங்க முடியவில்லை. அதே போல் அத்திகிரி மணிமண்டபத்திற்கருகில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் மூச்சு வாங்குகிறது.வயதானவர்கள் ஒருவழியாகி விடுகிறார்கள். அங்கே ஒரு சில மனிதநேயம் கொண்ட காவல்காரர்கள் ஒரு அட்டையை வைத்து காற்று வீசுவதைப் பார்க்க பாவமாக உள்ளது. தண்ணீர் தரம் சாதாரணம் தான். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை செய்ய காத்திருக்கும் நிலையில் அதிகாரவர்க்கம் அவர்களின் சேவையை ஏன் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.எங்கும் மெத்தனமே காணப்படுகிறது.
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
20-ஜூலை-201910:18:19 IST Report Abuse
Guna தேவை இல்லாத எதிர்பார்ப்பை உருவாக்கி அதில் லாபம் பார்க்கிறது சில நிர்வாகங்கள். எப்போவுதும் 10-15 வாங்கும் ஆட்டோ காரர் கூட இப்போது 100 வாங்குகிறார். இறந்த வயதான பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு பின் தான் இறந்தார்களாம், அதுவும் அனைவர்களுக்கும் உடல் ரீதியான பிரச்சனை இருந்தனவாம். Coincidence என்பது சாதாரணம் தான், அனால் இது அவ்வாறாக இருக்குமோ என தோன்றவில்லை. போதிய திட்டமிடல் இல்லாத செயல்முறையால் உயிர் பிரிந்தது தான் மிச்சம். சுய கட்டுப்பாடு மற்றும் பொறுமை அவசியம், அது மக்களுக்கும் பொருந்தும், நம்மிடத்தில் ஏனோ அது மறைந்து பல வருடங்கள் ஆகிறது. பல மக்கள் காத்துக்கொண்டிருக்கும் பொழுது எத்தனை பேர் பொறுமையாக பேருந்தில் ஏறி அமர்கிறோம். அவரவர் இடம் (seat) பிடிப்பதில் தான் முனைப்பு காட்டுகிறோம். அதையே நம் பிள்ளைகளுக்கும் படமாக்குகிறோம். எதார்த்தம் இது தான். பல முறை queue சரியாக தான் செயல் படுத்த படுகிறது, அனால் சிலர் அவரசரமாக பார்க்க முற்படும்போதோ, அல்லது vip அல்லாதவர்கள் VIP என குறுக்கு வழியில் செல்லும் போதோ குரோதம் ஏற்பட்டு அது முந்தி செல்ல தூண்டுகிறது. இது மனித இயல்பு தான் அனால் மாற்ற முடியாத இயல்பு இல்லை. நாம் மாறினால் இது போன்ற சூழல் மாறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X