அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அடுத்தது யார் ஆட்சி? இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல்

சென்னை: லோக்சபா தேர்தல், சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., - ஸ்டாலின் இடையே, காரசார விவாதம் நடந்தது.

இ.பி.எஸ்.,  ஸ்டாலின், மோதல்



சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுப்பர் என, முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி, 38 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற வைத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் உழைப்பிற்கு, மக்கள் அங்கீகாரம் தந்துள்ளனர்.
முதல்வர்: எங்களை பொறுத்தவரை, எதை செய்ய முடியுமோ, அதைச் சொல்லி, தேர்தலை சந்தித்தோம். மக்கள், ஒன்பது சட்டசபை தொகுதிகளில் வெற்றியை வழங்கி, இந்த ஆட்சியை தொடர்வதற்கு உதவியுள்ளனர். தி.மு.க., தலைமை, செய்ய முடியாத வாக்குறுதியை அளித்தது. இந்த வாக்குறுதி களை, எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?

எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: நாங்கள், விரைவில் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்த பின், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, நிச்சயம் நிறைவேற்றுவோம். சொல்வதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்வோம்.


முதல்வர்: தி.மு.க.,வின் கனவு, ஒரு காலத்திலும் நடக்காது. 2021ல், நிச்சயமாக, ஜெ., வழிநடக்கும் அரசு தான் மீண்டும்அமையும். இதைஅறுதியிட்டு, உறுதியிட்டு சொல்கிறேன்.

ஸ்டாலின்: 22 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தலில், 13 இடங்களில், நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் மட்டுமே, வெற்றி பெற்று உள்ளது. இதில், எது பெரியது?

முதல்வர்: என்னனென்ன திட்டங்களை செய்தோம், செய்வோம் என்று கூறி, நாங்கள் தேர்தலில் நின்றோம். லோக்சபா தேர்தலுக்கு தான், இப்போது தேர்தல் நடந்தது. தனித்தனியாக தேர்தல் நடந்து இருந்தால், எங்கள் பலத்தை நிரூபித்துஇருப்போம்.
கூட்டுறவு அமைச்சர், ராஜு: 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டேன்; நான் கருணாநிதியின் மகன்' என்று, ஸ்டாலின் அடிக்கடி கூறுவார்.கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கி களில், பொது மக்கள் பெற்றுள்ள, ஐந்து சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன்களை ரத்து செய்வதாக,

Advertisement

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது; இதை, எப்படி செயல்படுத்த முடியும்? மக்களை ஏமாற்றி தான், தி.மு.க., வெற்றி பெற்று உள்ளது.கல்வி அமைச்சர், செங்கோட்டையன்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது, '25 ஆயிரம் பேருக்கு, 3 சென்ட் இடத்தை, தி.மு.க., வேட்பாளர் வழங்குவார்' என்று, ஸ்டாலின் கூறினார். அவ்வாறு வழங்க வேண்டும் என்றால், 1,000 ஏக்கர் நிலம் தேவை; அதை, எப்போது வழங்கப் போகிறீர்கள்?
முதல்வர்: மக்களை ஏமாற்றித் தான், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த விவாதத்திற்குள் போனால், நிறைய பேச வேண்டி இருக்கும். நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாக சில காரியங்களை செய்து, இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman-G - Kallakurichi,இந்தியா
23-ஜூலை-201911:00:36 IST Report Abuse

Raman-Gஅதிமுக மற்றும் திமுக தமிழ்நாட்டுக்கு வேண்டாம் எங்களுக்கு மாற்றம் வேண்டும் நாற்பது ஆண்டு காலம் என்ன செய்தார்கள் காமராஜர் மட்டுமே மக்களுக்கு வேண்டியதை செய்தார் .

Rate this:
sridhar - Chennai,இந்தியா
20-ஜூலை-201920:02:11 IST Report Abuse

sridhar@பச்சையப்பன் , எந்த சுதந்திர தினம்?. வருடாவருடம் தினம்தினம் வருமே அதுவா?

Rate this:
konanki - Chennai,இந்தியா
20-ஜூலை-201919:54:49 IST Report Abuse

konankiஉதய நிதி இளைஞர் ஆணி தலைவர் என சொன்னோமா? இப்ப பாருங்க சொல்ல தையும் செயஞ்சிருக்கோம்

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X