அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேசிய மருத்துவ கழக மசோதாவை எதிர்க்க வேண்டும்!:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ''தேசிய மருத்துவக் கழக மசோதாவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகள் நடத்துவது, மாநிலங்கள் உரிமை என்பதை, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தேசிய மருத்துவ கழக மசோதா,  தி.மு.க., ஸ்டாலின்


சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:ஸ்டாலின்: மத்திய அமைச்சரவையில், தேசிய, 'எக்ஸிட்' தேர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவக் கழக அமைப்பு தொடர்பாக, மத்திய அரசின் புதிய மசோதா, மாநில உரிமைகளை பறிக்கக் கூடியதாக உள்ளது.

தேசிய மருத்துவக் கழகத்தின், உறுப்பினர்கள் நியமனத்தை பொறுத்தவரை, அதிக மருத்துவக் கல்லுாரிகள் இருக்கக்கூடிய, தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தலைவரை தேர்வு செய்யக்கூடிய, தேர்வு குழவிற்கும், மாநிலங்களுக்கும், எந்தவித அதிகாரமும் இல்லை.முன்பு வெளிவந்த மசோதாவில், எம்.பி.பி.எஸ்., முடித்த பின்,

தேசிய எக்ஸிட் தேர்வு வைத்திருந்தனர். இப்போது, எம்.பி.பி.எஸ்., படிப்பின் கடைசி ஆண்டே, தேசிய எக்ஸிட் தேர்வை, மத்திய அரசு நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில்உள்ள மருத்துவக் கல்லுாரி கட்டுப்பாட்டை, மத்திய அரசு முழுமையாகஎடுத்து கொள்ளக்கூடிய, ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, மருத்துவக் கல்லுாரிகளில் படிப்போருக்கு,இந்த தேர்விலிருந்து விலக்களிக்கலாம் என்பது, சென்னை மருத்துவக் கல்லுாரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி போன்றவற்றை, அவமதிப்பதாக உள்ளது. எனவே, தேசிய மருத்துவக் கழக மசோதாவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேணடும். மருத்துவக் கல்லுாரிகள் நடத்துவது, மாநிலங்கள் உரிமை என்பதை, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.


சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:உங்கள் கருத்துக்கு, மாறுபட்ட கருத்து இல்லை. இந்த மசோதா, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடுமையாக எதிர்த்தனர். அதன் காரணமாக, மசோதா, பார்லிமென்ட் நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.நிலைக்குழு,நம்மை அழைத்து விளக்கம் கேட்டது.தமிழக சுகாதாரத் துறை

Advertisement

செயலர் சென்று, நம் நிலைபாட்டை எடுத்துரைத்தார்.


'தமிழகத்திற்கு, அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர் களுக்கு, மீண்டும் ஒரு தேர்வு தேவையில்லை. வெளி நாடுகளில் படித்து வருவோருக்கு வேண்டு மானால், தேர்வு வையுங்கள்' என்று வலியுறுத்தப்பட்டது.நாம் கூறியதன் அடிப்படையில், தற்போது புதிதாக, சில ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.


எனினும், தேர்வு தொடர்பாக, மத்திய அமைச்சரவை, என்ன முடிவு எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.முழு விபரம் கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எக்ஸிட் தேர்வு கூடாது என்பதில், அரசு உறுதி யாக உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - chaennal,இந்தியா
20-ஜூலை-201922:51:07 IST Report Abuse

srinivasanTamil Nadu will improve only when it does against what Mr. Stallin says.He will tell that he will make Tamil Nadu like Singapore but only make it as dustpin. Useless

Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
20-ஜூலை-201922:32:10 IST Report Abuse

Raghuraman Narayananதரமான மருத்துவர் நாட்டிற்கு வேண்டுமென்றால் EXIT தேர்வு மிகவும் முக்கியம்., இது உயிர் சம்பந்த பட்ட விஷயம். இதில் அரசியல் கூடவே கூடாது. தமிழகத்தில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள் யாருக்கு சொந்தம் என்பது உலகத்துக்கே தெரியும். தமிழ் மக்கள் மானத்தை வாங்குவதை இவர்கள் எப்போது நிறுத்துவார்கள் என தெரியவில்லை. தமிழன் அறிவாளி என்பதை இவர்கள் உணர வேண்டும்.

Rate this:
konanki - Chennai,இந்தியா
20-ஜூலை-201919:23:08 IST Report Abuse

konankiஎன்னா சார் செய்யறது. கட்சியின் 100 m l a20 + m p கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் எல்லா தலைவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் ஒரேஒரு வேலை தனியார் மருத்துவ கல்லூரி ஓனர்களுக்கு வக்காலத்து வாங்குவது. சட்ட மன்றம் பாராளுமன்றம் தெருவில் இந்த தனியார் மருத்துவ கல்லூரி கொள்ள காரர்கள் சார்பாக போராட்டம் நடத்துவது. ஏனெனில் இது high. Stake சூதாட்டம். இதை விட்டா கோடி கோடியாக கட்டிங் போயிடும்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X