பதிவு செய்த நாள் :
'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம்
காந்தி சிலை முன் நின்ற எம்.பி.,க்கள்

மருத்துவப் படிப்பின் துவக்கத்தில், 'நீட்' நுழைவுத் தேர்வு இருப்பதைப் போல, அதன் கடைசி கல்வியாண்டில், மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள, 'நெக்ஸ்ட்' நுழைவுத் தேர்வை கண்டித்து, தமிழக எம்.பி.,க்கள், பார்லிமென்ட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட், நெக்ஸ்ட், காந்தி சிலை, கால், எம்.பி.,



எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப் போல, மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' எனப்படும் நெக்ஸ்ட் தேர்வை, இனி எழுத வேண்டுமென்ற நிலை, வரவுள்ளது.அதாவது, எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்து விட்டாலும், இறுதி ஆண்டு மாணவர்கள் மருத்துவராக அங்கீகாரம் பெற வேண்டுமெனில், அகில இந்திய அளவில், நெக்ஸ்ட் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.


இந்த தகுதித் தேர்வை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அமைச்சரவை குழு, தன் ஒப்புதலை தந்துவிட்டது.நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் என்பதை, தமிழக அரசியல் கட்சிகள், பார்லிமென்ட்டில் எதிர்த்து வருகின்றன.

இப்பிரச்னை குறித்து, லோக்சபாவில், துாத்துக்குடி, எம்.பி., கனிமொழி ஏற்கனவே பேசியிருந்தார்.


அதோடு விட்டு விடாமல், நேற்று, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக, இதே பிரச்னைக்காக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க., மட்டுமல்லாது, காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள் என, தமிழக கூட்டணி கட்சிகளின், எம்.பி.,க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றனர்.

நீட் நுழைவுத்தேர்வையும், புதிதாக வரவுள்ள நெக்ஸ்ட் தேர்வையும் எதிர்த்து, 'மருத்துவக் கனவை பறிக்காதே, மாணவர்களை வஞ்சிக்காதே' போன்ற கோஷங்களை எழுப்பி விட்டு, சபை நடவடிக்கைகளில் பங்கேற்க சென்றனர். இந்நிலையில், லோக்சபாவில், ஜீரோ நேரத்தின் போது, தமிழக எம்.பி.,க்கள் பல்வேறு முக்கிய விஷயங்களையும் கிளப்பினர்.


ரவீந்திரநாத் குமார் (தேனி) பெரியகுளம், போடி பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான டன் மாம்பழங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன. இந்த விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, மாம்பழங்களை சேமித்து வைக்கும்கிட்டங்கிகளையும், மாம்பழச்சாறு தொழிற்சாலையையும், அப்பகுதிகளில் அமைத்து தர வேண்டும்.

செந்தில்குமார் (தர்மபுரி):ராஜிவ் கொலை

Advertisement

வழக்கில் தொடர்புடைய, 7 பேரை விடுதலை செய்வதற்கு, தமிழக அரசு பரிந்துரை செய்து விட்டது. 2009 லிருந்து கிடப்பில் இருக்கும் இப்பிரச்னையில், கவர்னர் எப்போது முடிவு எடுப்பார் என்பதை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.


ரவிக்குமார் (விழுப்புரம்): விழுப்புரத்தில், பெண் கல்வி, பின்தங்கிய நிலையில் உள்ளது. அங்கு, மத்திய அரசின் சிறப்பு பள்ளிகளை நிறுவ வேண்டும். பழங்குடியினரான இருளர் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக, 'ஏகலவியா' சிறப்பு பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.


மாணிக்தாக்கூர் (விருதுநகர்) :தென் தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இதை மாற்றும் வகையில், மதுரை- - துாத்துக்குடி இடையே, தொழில் வளாகம் அமைக்கப்படும் என, 2013ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அறிவிப்பாக மட்டுமே உள்ள இத்திட்டத்தின் பணிகளை, விரைவில் துவங்க வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (59+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-ஜூலை-201915:17:13 IST Report Abuse

இந்தியன் kumarஇனி அரசியல்வாதி ஆவதட்கும் தேர்வு வைக்க வேண்டும் அப்பத்தான் தரமான அரசியல் வாதிகள் கிடைப்பார்கள்.

Rate this:
konanki - Chennai,இந்தியா
20-ஜூலை-201920:32:39 IST Report Abuse

konankiஇரண்டு நாட்கள் முன்பு ஆங்கில ஊடகங்களில் வந்த செய்தி சென்னை தனியார் பல் மருத்துவ கல்லூரி மாணவர் கட்டாய ஹவுஸ் ஸர்ஜன் பணி செய்யாமலே பல் மருத்துவ டிகிரி பெற்றார். இது மாதிரி எல்லாம் நடக்கணும் என்று தான் இந்த போராட்டம். இவங்க எல்லாம் சிகிச்சை பெற லண்டன் போவாங்க நம்ப தான் இந்த மாதிரி ஆட்கள் கிட்ட மாட்டி சாவணுமா?

Rate this:
natarajan s - chennai,இந்தியா
20-ஜூலை-201920:27:11 IST Report Abuse

natarajan sஒருமுறை தனியார் மருத்துவ கல்லூரி PG மாணவரிடம் பேசும்போது நீங்கள் இதுவரை எத்தனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து டாக்குமெண்ட் செய்து வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியிட்டு உள்ளீர்கள் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து விடை பெறும் வரை பதில் இல்லை . இதே வெளிநாடுகளில் PG என்றால் தனியாக thesis சமர்பிக்கவேண்டுமாம் . case history மற்றும் practical ரிசல்ட் கொடுக்க வேண்டும் குறைந்தபட்சம் வருடத்திற்கு தனியா 50 patient பற்றிய விவரம் கொடுக்க வேண்டும். இங்கு எல்லா PG யும் கூட்டத்தில் கோவிந்தாதான், பின் எப்படி தரம் இருக்கும் ? ஆனால் இந்த அரசியல் வாதிகளுக்கு மட்டும் தரமான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் வேண்டும் அரசு மருத்துவமனைகளில் ஏழைகள் சாகட்டும் என்றே போராடுகிறார்கள் . இந்தமாதிரி தேர்வு இந்திய முழுமைக்கும்தானே , பின் ஏன் மற்ற மாநில MP கள் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை ? எதிர்ப்பது ஒன்றே குறிக்கோள் வேறென்ன .

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X