பொது செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் லிட்டர் மழைநீர் சேமிப்பு தொட்டி: பெரம்பலூர் இன்ஜினியர் அசத்தல்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (5)
Advertisement
1 லட்சம் லிட்டர், மழைநீர் சேமிப்பு தொட்டி, பெரம்பலூர், இன்ஜினியர், அசத்தல்

பெரம்பலுார்:பெரம்பலுாரைச் சேர்ந்த கட்டட இன்ஜினியர், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள, மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி அசத்தியுள்ளார்.

பெரம்பலுார், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர், கலைநாதன், 58. கட்டட இன்ஜினியரான இவர், 'உன்னை அறிந்தால்' என்ற மாணவர் கல்வி மேம்பாட்டு மையம் மூலம், ஆதரவற்ற மாணவர்களை, தன்னார்வலர்கள் உதவியுடன் படிக்க வைக்கிறார்.இதோடு, பெரம்பலுார் நகரில், 'கனவு இல்லம் கட்டுனர் குழுமம்' என்ற பெயரில், 33 ஆண்டுகளாக, வீடு கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 'மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க சம்மதிக்கும் நபர்களுக்கு மட்டுமே, வீடு கட்டிக் கொடுப்பது' என, கலைநாதன் முடிவு செய்தார்.இதன்படி, பெரம்பலுார் அன்பு நகரில், வெங்கடேசன் என்பவருக்கு, இவர் கட்டிய வீட்டில், 1 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் தொட்டியை, 1.30 லட்சம் ரூபாய் செலவில், கட்டிக் கொடுத்துள்ளார்.

வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழை நீர் முழுவதும், இரண்டு குழாய்கள் மூலம் கட்டடத்தின் கீழ் தளத்தில், 200 லிட்டர் கொள்ளளவு உள்ள பெரிய ஜல்லி, மணல், மரக்கரி, கூழாங்கல் அல்லது சின்ன ஜல்லி நிரப்பப்பட்ட இரண்டு பிளாஸ்டிக் பேரல்களில் வந்து சேர்கிறது.இதிலிருந்து வடி கட்டப்பட்ட தண்ணீர், 2 'இன்ச்' பைப்கள் மூலம், கட்டடத்தின் அடியில், 'பேஸ்மட்டம்' பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு தொட்டியில் சேமிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீரையும், சுத்திகரித்து, மீண்டும்
பூமிக்கடியில் அனுப்பும் வகையில், வீட்டருகில், பெரிய அளவில், ஐந்து இடங்களில், அதற்கான கட்டமைப்புகளையும் கட்டிக் கொடுத்து உள்ளார்.இவரது புதிய முயற்சிக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளதுடன், பாராட்டும் குவிந்து வருகிறது.

இவரை, 96778- - 52443 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-201915:13:19 IST Report Abuse
Bangalore wala Chennai makkaluku buththi varatum.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
20-ஜூலை-201914:12:54 IST Report Abuse
raghavan சிறு சிறு தொட்டிகளாக பல கட்டலாம்... பல்லி, அணில், ஓணான் விழுந்து கிடந்தால் கூட அந்த தொட்டி நீரை மட்டும் வெளியேற்றி விடலாம். வாசகர் புருஷோத்தமன் அவர்கள் சொன்னது போல இவ்வளவு பெரிய அளவில் கட்டி மூடினால் அதிக விஷ வாயு சேரும் வாய்ப்புள்ளது சுத்தம் செய்வதும் கடினம்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
20-ஜூலை-201911:14:23 IST Report Abuse
 N.Purushothaman தொட்டியில இறங்கறதுக்கு முன்னாடி ஏதாவது விஷத்தன்மை உள்ள வாயுக்கள் இருக்கான்னு பரிசோதனை செஞ்சிட்டு இறங்குங்கப்பா .....பல பேருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இறங்கி உயிரை விடுகிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X