தேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (60)
Share
Advertisement
அலகாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றி செல்லாது என, அறிவிக்க கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மோடிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 'மாஜி' வீரர், தேஜ் பகதுார் யாதவ்

அலகாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றி செல்லாது என, அறிவிக்க கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மோடிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.latest tamil newsசமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 'மாஜி' வீரர், தேஜ் பகதுார் யாதவ் என்பவர், சமாஜ்வாதி சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், ஊழல் மற்றும் இதர குற்றச்சாட்டுகளுக்காக, எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்படவில்லை என்ற சான்றி தழை, வேட்பு மனுவுடன் இணைக்க தவறி யதால், இவரது மனு நிராகரிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், தன் வேட்பு மனு தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே, வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், தேஜ் பகதுார், மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.கே.குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil newsஅப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேஜ் பகதுாரின் வேட்பு மனு நிராகரிப்புக்கு முன், அது தொடர்பாக விளக்கம் அளிக்க, வாய்ப்பு அளிக்கப்படவில்லை' என, வாதாடினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு, அடுத்த மாதம், 21ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஜூலை-201917:00:20 IST Report Abuse
Malick Raja பலரும் தன்நிலை அறியாமல் எதோ ஒரு உத்வேகத்துடன் கருத்துக்கள் வெளிவந்துள்ளது என்பது உண்மை ....மக்களிடம் கைக்கூப்பி வணங்கி பெறப்பட்ட வாக்குகள் மூலம் வந்ததுதான் பிரதமர் பதவி ...
Rate this:
Anand - chennai,இந்தியா
20-ஜூலை-201918:35:52 IST Report Abuse
Anandஇந்திய திருநாட்டை, இந்திய கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் போட்ட வாக்குகளால் தான் பிரதமர் ஆனார். அந்நியர்களுக்கு காவடி தூக்கும் எவனும் அவருக்கு வாக்கு போடமாட்டான் என அவர் நன்கு அறிவர், அப்படிப்பட்டவர்கள் தான் இன்றும் மோடி ஒழிக என கூவிக்கொண்டு இழி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்....
Rate this:
Rajas - chennai,இந்தியா
20-ஜூலை-201923:02:05 IST Report Abuse
Rajasசும்மா உளறாதீர்கள். இந்திரா தான் இந்தியா என்று சொன்ன போது உங்களை போன்றவர்கள் அப்போது வாஜ்பாய், மொராஜி போன்றவர்களை இப்படி தான் அசிங்கப்படுத்தினார்கள். பிஜேபி தான் இந்தியாவா. பிஜேபி எவ்வளவு வருடங்களாக இருக்கிறது. பிஜேபியை பிடிக்காதவர்கள் எல்லாம் தேச துரோகிகளா. பிஜேபியுடன் கூட்டணி வைத்த அதிமுகவை நம்பின அளவிற்கு கூட பிஜேபியை தமிழக மக்கள் நம்ப வில்லை என்றால் என்ன காரணம்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூலை-201915:16:17 IST Report Abuse
Endrum Indian நான் பிறப்பதற்கு முன் அவர் பிறந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை பிரதம மந்திரி ஆக்கியது செல்லாது என்று அடுத்த வழக்கு வெகு விரைவில் வரும் கோர்ட்டும் அதற்கு இதே மாதிரி நோடீஸ் அனுப்பும். பணமே பணமே பணமே உன் ஆதிக்கம் சாதாரண மனிதன் கொஞ்சம் அவதிப்படுவான், ஆனால் கோர்ட்டு மிகமிக அதிகமாகவே ஆணை அனுப்பும் இது தானே ஜாமீனில் உள்ள பல பல தலைவர்கள் வாழ்வின் உண்மை?????
Rate this:
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-ஜூலை-201913:21:25 IST Report Abuse
Needhiyin Pakkam Nil என்னடா கொடுமை இது, தேர்தல் கமிஷன் ஒருவரின் மனுவை நிராகரித்தால் அதற்கு விளக்கம் கேட்டு நீதிபதி அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு தானே நோட்டீஸ் அனுப்ப வேண்டும், ஏன் அங்கு வெற்றிபெற்ற மற்றொரு வேட்பாளருக்கு அனுப்ப வேண்டும், ஒரு வேள நீதிபதிகள் தேர்தல் கமிஷன் என்று அனுப்புவதற்கு பதிலாக பிரதமர் அலுவலகம் என்று முகவரியை தவறாக எழுதி அனுப்பிவிட்டார்களோ.............
Rate this:
Rajas - chennai,இந்தியா
20-ஜூலை-201919:25:14 IST Report Abuse
Rajasஅவர் தான் Election கமிஷனின் பெரிய அதிகாரி என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது....
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201908:49:04 IST Report Abuse
uthappaஅதுதான் சரி, உங்களை போன்ற்வர்கள் நீதி துறையிலும் இருக்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X