தேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு நோட்டீஸ்| Dinamalar

தேர்தல் வழக்கு; பிரதமர் மோடிக்கு 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (60)
Share

அலகாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றி செல்லாது என, அறிவிக்க கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மோடிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.



latest tamil news



சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 'மாஜி' வீரர், தேஜ் பகதுார் யாதவ் என்பவர், சமாஜ்வாதி சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், ஊழல் மற்றும் இதர குற்றச்சாட்டுகளுக்காக, எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்படவில்லை என்ற சான்றி தழை, வேட்பு மனுவுடன் இணைக்க தவறி யதால், இவரது மனு நிராகரிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், தன் வேட்பு மனு தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே, வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், தேஜ் பகதுார், மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.கே.குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேஜ் பகதுாரின் வேட்பு மனு நிராகரிப்புக்கு முன், அது தொடர்பாக விளக்கம் அளிக்க, வாய்ப்பு அளிக்கப்படவில்லை' என, வாதாடினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு, அடுத்த மாதம், 21ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X