அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (85)
Advertisement

சென்னை: மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை. தமிழை வளர்க்கவே பாடுபடுகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.






சென்னை கிண்டியில் நடந்து வரும் நகரத்தார் மாநாட்டின் ஒரு அங்கமாக நடந்த பொருளாதார கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறுகையில், தஞ்சாவூர் கோயில் போல் தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது.

தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும். கல்வி தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள்.






சூட்கேஸ் தூக்காதது ஏன்?



சூட்கேஸ்கள் ஆங்கிலேர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் பட்ஜெட் சாதாரணமாக துணியால் சுற்றப்பட்டு, எடுத்துச் சென்று தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றார்.


இந்திய திணிப்பில்லை :


கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்தி திணிப்பு என கூறுவதை ஏற்க முடியாது. தமிழை வளர்க்க நாங்களும் முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறுவது சரியல்ல. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி எத்தனை நாட்களுக்கு இந்த ஹிந்தியை வைத்து திராவிடர்கள் பிழைப்பு நடத்துவார்களோ தெரியவில்லை. விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்கள். இன்னும் இந்த தமிழன் விழிக்கவில்லை. என்று விடியும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஜூலை-201901:15:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பட்ஜெட்டை துணி பையில் சுத்திட்டு வந்தது மட்டும் தான் பட்ஜெட்டில் பெரிய விஷயம்.. மத்தது பேசுற மாதிரி இல்லை போலும்.. வெள்ளைக்காரன் காலத்து ஐடியாவை இவங்க மாத்திட்டாங்களாம்.. வெள்ளைக்காரன் கிட்டே அப்போ எதுக்கு போர் விமானம் வாங்குறீங்க? புஷ்பக விமானம் தயார் பண்ணி, சீனா மேலே நாகாஸ்திரம், பாகிஸ்தான் மேலே வஜ்ராயுதம் போடவேண்டியது தானே? அரசு வெளியிடும் வரையில் பட்ஜெட்டின் ரகசிய தன்மையை காக்கும் முக்கியத்துவத்தை கிழித்து போட்டு, பட்ஜெட் போடுறதுக்கே கார்ப்பரேட் கூலிகளை சம்பளம் கொடுத்து வைத்து அதில் சட்டப்பிரிவுகளை அவர்கள் இஷ்டத்துக்கு வைத்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க வைத்த கார்ப்பரேட் அரசு தானே நீங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஜூலை-201900:59:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் விவசாயிகள் வருமானத்தை ரெட்டிப்பாக்க முயற்சி எடுக்கிறோம்… பாதி விவசாயியை சாவடிச்சிட்டா? அப்புறம் மீதி இருக்குறவங்க வருமானம் ரெட்டிப்பாயிடிச்சின்னு கணக்கு சொல்லிடுவானுங்க.. அதை தான் செய்யிறானுங்க காவி கும்பல்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X