டிரம்பிற்கு பதிலடி: ஒபாமா மனைவி தடாலடி

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement

வாஷிங்டன் : இன பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சில் ஒபாமா கடும் கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.



latest tamil news


அமெரிக்க ஜனநாயக பிரிதிநிதிகள் சபையில் ஜூலை 16 அன்று வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறும் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்தது. அப்போது 4 கருப்பின எம்.பி.,க்களை குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப், அவர்கள் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தங்களின் பிறப்பிட நாடு எதுவோ அங்கேயே திரும்பிச் செல்லட்டும் என்றார்.
இந்த கருத்தை திரும்பப் பெறும்படி அவையில் கோஷம் எழுப்பப்பட்டது. இதுனால் 10 விநாடிகள் பேச்சை நிறுத்திய டிரம்ப், கோஷம் அடங்கியதும் பேச்சை தொடர்ந்தார்.


latest tamil news



இது தொடர்பாக எதிர்ப்பு அதிகரித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தான் அப்படி பேசவேயில்லை என மறுத்தார். டிரம்ப்பின் இந்த இனவாத பேச்சு குறித்து மிச்சில் ஒபாமா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நமது நாட்டை பிரிவினை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்களா; நாம் இங்கு பிறந்தவர்களாகவோ அல்லது அகதியாக வந்தோமோ அப்படி இருந்தாலும் இது அனைவருக்குமான இடம். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எனது அமெரிக்காவோ அல்லது உங்களின் அமெரிக்காவோ இல்லை. இது நமது அமெரிக்கா என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201910:46:38 IST Report Abuse
Chennaivaasi மிச்சில் ஒபாமா இல்லை. மிஷேல் ஒபாமா என்பதே சரியான உச்சரிப்பு.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
21-ஜூலை-201907:45:55 IST Report Abuse
Viswam அதே மாதிரி அந்த 37 எம்பிகளும் நம்ம பாராளுமன்றத்தில் சந்தோசமா இல்லைனாக்க சொந்த ஊருக்கு பெர்மனெண்டா வந்துடலாம்?
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
21-ஜூலை-201911:27:12 IST Report Abuse
அம்பி ஐயர்அய்யய்யோ.... அவுனுங்க டெல்லியிலயே இருக்கட்டும்.......
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-ஜூலை-201904:25:23 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தியா உள்பட பலநாட்டு மக்களும் கல்விக்கு என்று அங்கே போயிட்டு செட்டில் ஆவுறாங்க இன்க்ளூடிங் திஸ் ஜனாதிபதி ட்ரம்ப் என்பது உண்மை அவன் ஜெர்மானிலேயிலேந்து வந்த குடியேறிய வமிசாவளியேதான் , அமெரிக்க சரித்திரம் படிக்கவும் ஐரோப்பிய சிறைக்கைதிகளே தான் அமெரிக்காவும் துரத்தப்பட்டவங்க , அவனுகளுக்கு மரபிலே நிறவெறி அதிகம் உண்டு கறுப்பின லோக்கல் களைதனது அடிமையாக ஆக்கிந்திடனுக இந்த வெள்ளைநிற ஐரோப்பியர்கள் ஆஷ்டிரேலியாவுலேயும் இதே கதைதான் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டாங்க ஐரோப்பியன் புத்தியே தான்தான் உயர்வு மற்ற எல்லோரும் கேவலம் என்று பார்க்கும் குணம் உள்ளவங்களேதான் இந்த அரைவேக்காட்டு வெள்ளை தோலர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X