ஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (84)
Advertisement

மும்பை : ஜெய்ஸ்ரீராம் என சொல்ல வற்புறுத்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞரை, இந்து தம்பதி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.






மகாஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருபவர் இம்ரான் இஸ்மாயில் பட்டேல். இவர் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெகும்புரா பகுதியில் வழிமறித்தது 10 பேர் கொண்ட மர்ம கும்பல். ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கட்டாயப்படுத்தி, இம்ரானை கும்பல் கடுமையாக தாக்கியது.

வலி தாங்க முடியாமல் இம்ரானின் அலறல் குரல் கேட்டு, அப்பகுதியில் குடியிருக்கும் இந்து தம்பதி, வீட்டில் இருந்து வெளியே வந்து இம்ரானை காப்பாற்றியது. இம்ரானை தாக்க வேண்டாம் என மர்ம கும்பலிடம் அந்த தம்பதியர் கெஞ்சி உள்ளனர்.





கும்பலிடம் இருந்து பைக் சாவியை பெற்று கொடுத்து, இம்ரானை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத வேறுபாட்டை கடந்து, தாக்கப்பட்டவருக்கு மனிதநேயத்துடன் உதவிய இந்து தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar - Chennai,இந்தியா
21-ஜூலை-201915:18:51 IST Report Abuse
Ajit Kumar இதற்க்கு பெயர் மர்ம கும்பல் என்று எழுதி இருக்கிறீர்கள், தீவிரவாதி கும்பல் என்று மாற்றி எழுதுங்கள், இவர்களால் எங்களுக்கும் கேட்ட பெயர் வருது
Rate this:
Share this comment
Ajit Kumar - Chennai,இந்தியா
22-ஜூலை-201915:05:37 IST Report Abuse
Ajit Kumarஇதற்க்கு லாம் பதில் வராது...
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
21-ஜூலை-201904:55:06 IST Report Abuse
KSK வன்முறையை தடுத்து ஹோட்டல் ஊழியரை காப்பாற்றிய தம்பதியரின் துணிச்சலும் பொறுப்புணர்வும் பெரிதும் பாராட்டத்தக்கது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு உடனடியாக க்டுமையான நடவடிக்கை எடுப்பதும், பின்னணியில் உள்ளவர்கள் குறித்த உண்மை விவரங்களை வெளியிடுவதும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
20-ஜூலை-201923:23:08 IST Report Abuse
ramanathan இந்த செயலை செய்தவர்கள் களவாணி காங்கிரஸ் கட்சியினர். பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஜூலை-201905:13:26 IST Report Abuse
Sanny @sRamanathan , நீங்கள் சொல்வதுபோல அவங்க எதாவது ஏடாகூடமா செய்தால் இவங்க, இவங்க ஏதாவது ஏடாகூடமா செய்தால் அவங்க என்று பொய்யான கருத்துக்களை எழுதுவது தவறு, இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தால் இன்னும் தீவிரவாதம் தொடரும், முடிவுக்குவராது, இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும் போது காவல் துறை தீவிரமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை ஜாதி, மதம், அரசியல் வேறுபாடு இல்லாமல் தண்டிக்கப்படணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X