ஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி| Dinamalar

ஜெய்ஸ்ரீராம் தாக்குதல்: காப்பாற்றிய இந்து தம்பதி

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (84)
Share
மும்பை : ஜெய்ஸ்ரீராம் என சொல்ல வற்புறுத்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞரை, இந்து தம்பதி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.மகாஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருபவர் இம்ரான் இஸ்மாயில் பட்டேல். இவர் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெகும்புரா பகுதியில் வழிமறித்தது 10

மும்பை : ஜெய்ஸ்ரீராம் என சொல்ல வற்புறுத்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞரை, இந்து தம்பதி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.



latest tamil news



மகாஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருபவர் இம்ரான் இஸ்மாயில் பட்டேல். இவர் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெகும்புரா பகுதியில் வழிமறித்தது 10 பேர் கொண்ட மர்ம கும்பல். ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கட்டாயப்படுத்தி, இம்ரானை கும்பல் கடுமையாக தாக்கியது.

வலி தாங்க முடியாமல் இம்ரானின் அலறல் குரல் கேட்டு, அப்பகுதியில் குடியிருக்கும் இந்து தம்பதி, வீட்டில் இருந்து வெளியே வந்து இம்ரானை காப்பாற்றியது. இம்ரானை தாக்க வேண்டாம் என மர்ம கும்பலிடம் அந்த தம்பதியர் கெஞ்சி உள்ளனர்.


latest tamil news



கும்பலிடம் இருந்து பைக் சாவியை பெற்று கொடுத்து, இம்ரானை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத வேறுபாட்டை கடந்து, தாக்கப்பட்டவருக்கு மனிதநேயத்துடன் உதவிய இந்து தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X