திருப்பதி : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட். The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த டிரஸ்டிற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE