பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கனமழை தொடரும்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Heavy rain, Kerala, கேரளா, கனமழை, அணைகள் திறப்பு, வானிலை மையம்,

திருவனந்தபுரம்: கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்ட மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை வரும் 23ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.


மீனவர்கள் மீட்பு


கடற்பகுதியில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள கடற்பகுதியில், வட மேற்கு திசையில் மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விழிஞ்சம் பகுதியில் காணாமல் போன 4 மீனவர்களை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு கொண்டு வந்தனர். கொல்லம் பகுதியில், படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் காணவில்லை. படகில் இருந்த 2 பேர் நீத்தி பத்திரமாக கரை சேர்ந்தனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொன்னானி பகுதியில், மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.







3 பேர் உயிரிழப்பு


கடந்த 24 மணி நேரத்தில் இடுக்கியின் பீர்மேடு, கோழிக்கோட்டில் தலா 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானி பகுதியில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்ததால், பல வீடுகள் சேதமடைந்தன. மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.


அணைகள் திறப்பு


கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்ந்து 2307.12 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 2,403 அடியாகும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 112.2 அடியை எட்டியுள்ளது.
மேலும் மலங்கானா அணை, அருவிக்காரா அணை, இடுக்கியின் பம்பலா அணை, திருச்சூர் மாவட்டத்தின் பெரின்கர்குத்து அணை, பொன்னானி அணை ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.




Advertisement




வெள்ளப்பெருக்கு


திருவனந்தபுரத்தில் உள்ள கரமன நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான இடம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பம்பா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடைகள் சேதமடைந்தன.







எச்சரிக்கை


கோழிக்கோடு, இடுக்கி தவிர்த்து, வயநாட்டிற்கும், வரும் 22 ம் தேதி வரை இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இங்கு 20 செ.மீ., வரை மழை பதிவாகும் என எச்சரித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தில், இன்று(ஜூலை 20)வரை ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.






ரெட் அலெர்ட் விடப்பட்ட கோழிக்கோடு, இடுக்கி மாவட்டங்களில், நேற்று(ஜூலை 19) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சில இடங்களில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.






திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்கோடு மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக காசர்கோடு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
21-ஜூலை-201910:21:31 IST Report Abuse
Nathan வழக்கம் போல RSS சேவைக்கு வரும். அப்புறம் காந்தி பேர சொல்லி திட்டிகிற லாம் .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-ஜூலை-201904:39:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni வீடுகள் இஷ்டத்துக்கு மலைகள் மீதுல்லாம் கட்டிண்டு போறானுக மலைகள் தான் இயற்க்கை அரண் இதெல்லாம் தெரியாமல் மலைகளை கிரானைட்டுக்காக அழிப்பது எவ்ளோ கேவலமான விஷயம் , அன்று பழையகால வீடுகளில் காரைகளாலும் சிமெண்டுக்காலம் தான் தரைகள் இருந்தன இன்று எல்லோரும் mosaik தரை போல வழவழன்னு போட்டுக்கிறாங்க எல்லாம் வீண் பகட்டுதான் ஆதிகாலம் போல மண் தரை வேண்டாம் சிமெண்ட் தரையே போதுமே எல்லா மந்திரிகள் எம்பி /எம் எல் ஏ கால் வீடுகளெல்லாம் பொய் பாருங்க எவ்ளோ செலவச்செழிப்பா இதுன்னு கைலே எவ்ளோகோடீக்ளா பொரளுது ஆனா எதுவமே உழைச்சுவந்த காசா ?????????????நாளெல்லாம் வயல்லே வெளியே செய்யும் உழவனுக்கு குடிசைவீடு ஒருவேளையுமே செய்யாமல் vip என்று உலா வரும் நபர்கள் இருப்பது மாளிகைகளில் என்பது உண்மை
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
20-ஜூலை-201919:45:04 IST Report Abuse
konanki ஹாஹா எதுக்கு குடுக்காராங்களோ அதுக்கு போய் சேரமா நடுவில் திருடி தின்ற குருப்புக்கு வக்காலத்து ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X