பொது செய்தி

இந்தியா

டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (34)
Advertisement
SheilaDixit, ஷீலா தீக்சித், காலமானார், டில்லி, முன்னாள் முதல்வர்,

புதுடில்லி: காங்., மூத்த தலைவரும், மூன்று முறை டில்லி முதல்வராக பதவி வகித்தவருமான, ஷீலா தீட்ஷித், 81, மாரடைப்பு காரணமாக, டில்லியில் இன்று(ஜூலை 20) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், டில்லியில் நாளை மாலை நடக்கின்றன.


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர், ஷீலா தீட்ஷித். காங்கிரஸ் மேலிட தலைவரான, சோனியாவின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்களது குடும்ப நண்பராகவும் விளங்கியவர். எம்.பி., - எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்தவர். ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பார்லிமென்ட் விவகார துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தலைநகர் டில்லியில், காங்கிரசின் செல்வாக்கை வளர்த்தவர். 1998 லிருந்து, 2013 வரை, டில்லி முதல்வராக பதவி வகித்து, டில்லி முதல்வராக நீண்ட நாள் பதவி வகித்தவர் என்ற, சாதனையை படைத்தார்.
கேரள மாநில கவர்னராகவும் பதவி வகித்த இவர், உ.பி., யில், கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது, காங்கிரசின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லி வட கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அப்போது, இவருக்காக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.சமீபகாலமாகவே, இருதய கோளாறு உள்ளிட்ட சில நோய்களால், ஷீலா தீட்ஷித், அவதிப்பட்டு வந்தார்.


இந்நிலையில், இன்று(ஜூலை 20) அதிகாலை, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி, போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடல்நிலையில், ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மாலை, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி, அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், டில்லியில் நாளை மாலை நடக்கின்றன. மறைந்த ஷீலா தீட்ஷித்துக்கு, சந்தீப் என்ற மகனும், லடிகா என்ற மகளும் உள்ளனர்.

ஷீலா தீட்ஷித் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்., மூத்த தலைவர் சோனியா, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அஞ்சலி

மறைந்த ஷீலா தீக்சித் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.தலைவர்கள் இரங்கல்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


மூத்த அரசியல் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித் காலமான செய்த வருத்தம் அளிக்கிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்த காலத்தில், டில்லியில் ஏற்படுத்திய மாற்றத்திற்காக அவர் என்றும் அனைவரது நினைவிலும் இருப்பார். அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல். தெரிவித்து கொள்கிறேன்

Sad to hear of the passing of Smt Sheila Dikshit, former Chief Minister of Delhi and a senior political figure. Her term in office was a period of momentous transformation for the capital for which she will be remembered. Condolences to her family and associates #PresidentKovind

— President of India (@rashtrapatibhvn) July 20, 2019பிரதமர் மோடி

ஷீலா தீக்சித் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. கனிவும், கம்பீரமும் கொண்ட ஆளுமைகளில் ஒருவர். டில்லியின் வளர்ச்சிக்கு அவர் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார். அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

Deeply saddened by the demise of Sheila Dikshit Ji. Blessed with a warm and affable personality, she made a noteworthy contribution to Delhi's development. Condolences to her family and supporters. Om Shanti. pic.twitter.com/jERrvJlQ4X

— Narendra Modi (@narendramodi) July 20, 2019
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்


டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் காலமான செய்தி பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் மிகப்பெரிய தலைவர். கட்சிகளை தாண்டி அனைவராலும் மதிக்கப்படுபவர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணம் உள்ளது.

The passing away of former Chief Minister of Delhi, Smt. Sheila Dixit is deeply saddening. She was a tall Congress leader known for her congenial nature.
Sheilaji was widely respected cutting across party lines. My thoughts are with her bereaved family & supporters. Om Shanti!

— Rajnath Singh (@rajnathsingh) July 20, 2019
உள்துறை அமைச்சர் அமித்ஷா


டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்தினருடன் கடவுள் துணை நிற்கட்டும்


நிதி அமைச்சர் நிர்மலா


ஷீலா தீக்சித் காலமான செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர், ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

Sorry to know that former Chief Minister of Delhi Smt. #SheilaDikshit is no more. Condolences to her family, friends and followers.

— Nirmala Sitharaman (@nsitharaman) July 20, 2019
ராகுல்


ஷீலா தீட்ஷித்தின் மறைவுச் செய்தி, என்னை மிகவும் பாதித்து விட்டது. என் மீது, தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தியவர். காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். காங்கிரசின் தவப்புதல்வி மறைந்து விட்டார்.

I'm devastated to hear about the passing away of Sheila Dikshit Ji, a beloved daughter of the Congress Party, with whom I shared a close personal bond.
My condolences to her family & the citizens of Delhi, whom she served selflessly as a 3 term CM, in this time of great grief.

— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2019

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி ஷீலா தீட்ஷித்தை சோனியாவிற்கு பிடிக்காது. சிறிது காலம் அம்மாவும் பையனும் இவரை ஒதுக்கி வைத்தார்கள். இவருக்கு சமமான தலைவர் கிடைக்காத காரணத்தால் மீண்டும் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தில்லியில் மூன்று முறை முதல்வராக திறமையாக ஆட்சி செய்துள்ளார். தில்லி மெட்ரோவை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராதலால் லஞ்ச லாவண்யத்திற்கு பஞ்சமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
21-ஜூலை-201908:17:53 IST Report Abuse
Giridharan S ஓம் ஷாந்தி. இவரின் ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறட்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-201903:25:29 IST Report Abuse
J.V. Iyer RIP அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X