பாட்டி போல் வருமா...பேத்தியின் தர்ணா!

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி : உ.பி.,யில் காங்., கட்சியின் நம்பிக்கையை பெறுவதற்காக பாட்டி இந்திராவின் பாணியில் தர்ணா நடத்தி உள்ளார் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா.


இரண்டு நாட்களுக்கு முன், உ.பி.,யின் சோன்பத்ரா கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா, தடுத்து நிறுத்தப்பட்டு மிர்சாபுர் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு இந்திராவை போல், இரவு முழுவதும் தர்ணா செய்தார் பிரியங்கா.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கும் வரை அந்த இடத்தை விட்டு செல்ல போவதில்லை எனவும் அடம்பிடித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், விருந்தினர் மாளிகைக்கே வந்து பிரியங்காவை சந்தித்ததை அடுத்து அவர் டில்லி திரும்ப முடிவு செய்தார். ஆனால், மீண்டும் திரும்பி வர போவதாக உறுதி அளித்து சென்றுள்ளார்.

இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்த போதிலும், அங்கு இருந்து பிரியங்கா சிறிதும் நகரவில்லை.

1977 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த இந்திரா, சரிந்த தனது அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக, பீகாரின் பெல்சி கிராமத்தில் உயர் ஜாதியினரால் ஒரு மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 11 தலித்களின் குடும்பங்களை சந்திக்க சென்றார். இதனால் தேசிய அரசியலில் இந்திராவின் மதிப்பு உயர்ந்தது. அவர் அந்த கிராமத்திற்கு யானை மீது ஏறிச் சென்றார்.

பிரியங்காவின் உ.பி., விஜயமும், இந்திராவின் பெல்சி விஜயமும் ஒன்றா?பிரியங்காவின் இந்த உ.பி., பயணம், இந்தியா பெல்சி சென்றதை போல் உள்ளது என சில காங்., தலைவர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலர், பிரியங்கா இந்திராவை போல் இல்லை. 2019, 1977 ஆக முடியாது என்கின்றனர். இருந்தாலும் தற்போது உ.பி.,யில் காங்., கை ஓங்கி வருவதற்கு பிரியங்கா அல்லாமல் வேறு யாரும் காரணம் இல்லை.

பிரியங்காவின் இந்த பயணத்தை 'பிக்னிக் (சுற்றுலா) அரசியல்வாதி ' என பா.ஜ., விமர்சித்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் கூறுகையில், அவரை தவறாக கணக்கிட்டு, தடுத்து வைத்துள்ளோம். அதனால் தான் அவர் அதை பெரிதாக சித்தரித்து விட்டார். தலைப்புச் செய்தி போடும் அளவிற்கு இதில் ஒன்றுமில்லை. எதுவாக இருந்தாலும், தேர்தலின் சமயத்தில் எப்படி சுற்றுலா செல்வது போல் வந்தாரோ அதே போன்று இங்கு வந்துள்ளார் என்பதை உ.பி.,யில் உள்ள அனைவரும் அறிவார்கள் என்றார்.
தேர்தலுக்கு முன் எப்படி சம்பந்ததே இல்லாமல் கங்கை ஆற்றில் படகில் சென்றாரோ, அதை விட சக்தி வாய்ந்ததாக பிரியங்காவின் இந்த முழு இரவு தர்ணா இருந்தது. இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த உள்ளூர் தலைவர்களான அகிலேஷ் மற்றும் மாயாவதியை விட பிரியங்காவின் சந்திப்பு பெரிதாக்கப்பட்டு விட்டது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ராகுல், தனது சகோதரிக்கு ஆதரவான டுவிட்டர் பதிவில், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு 2 மாதங்கள் ஆகியும் ராகுலுக்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்ய காங்., கடுமையாக முயற்சித்து வருகிறது. ராகுலை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என சோனியா தலைமையிலான மூத்த தலைவர்கள் படை மற்றும் இளம் தலைவர்கள் சிலரின் போராட்டம் இன்னும் பலன் தரவில்லை..

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanaseharan Arunachalam - Mayiladuthurai,இந்தியா
21-ஜூலை-201912:08:11 IST Report Abuse
Gnanaseharan Arunachalam பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க போகலில்லை என்றால் திமிர். பார்க்க போனால் விளம்பரம். எது செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. எதுவும் பேச கூடாது செய்ய கூடாது என்றால் அரசியல் அமைப்பில் எதிர் கட்சி என்பது தேவையே இல்லையே. .
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
21-ஜூலை-201911:22:32 IST Report Abuse
அம்பி ஐயர் இன்னமும் ஐந்து ஆண்டுகள் வரை.... காங்கிரசுக்கு புதிய தலைவரைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.... அது வரை ராகுல் ராஜினாமா முடிவில் “உறுதி” யாக நிற்பார்....
Rate this:
Share this comment
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
21-ஜூலை-201909:30:55 IST Report Abuse
G.MUTHIAH பிரியங்கா தான் அடுத்த இந்திய பிரதமர்,குறித்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
21-ஜூலை-201918:29:55 IST Report Abuse
அம்பி ஐயர்அப்போ.... ராபர்ட் தான் ஜனாதிபதியா...???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X