இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் பறிமுதல்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Indians, Sailors, British Tanker, Iran,இந்திய மாலுமிகள், கப்பல், ஈரான், பிரிட்டன், பறிமுதல்

டெஹ்ரான்: 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 மாலுமிகளுடன் சென்ற பிரிட்டனுக்கு சொந்தமான ஸ்டெனா இம்பீரியோ என்ற எண்ணெய் கப்பலை, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் பறிமுதல் செய்துள்ளது.

சர்வதேச கடலோர பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், ஈரான் கடற்பகுதியில் மீன்பிடி படகு மீது மோதியதால், கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ஈரான் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன், வளைகுடா பகுதியில் இரண்டு கப்பல்களை ஈரான் பறிமுதல் செய்துள்ளதாகவும், பிரச்னையை தீர்க்காவிட்டால், ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ராணுவ ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. சூழ்நிலையை சமாளிக்க தூதரக ரீதியில் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்றார்.
படகு பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை பகுதியை தவிர்க்கும்படி, பிரிட்டன் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





இரண்டு வாரங்களுக்கு முன், தடையை மீறி, சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றி சென்ற ஈரான் படகை பிரிட்டன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கப்பலை விடுவிக்க பிரிட்டன் கோர்ட் 30 நாட்கள் தடையை நீட்டித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டனுக்கு சொந்தமான படகை ஈரான் பறிமுதல் செய்துள்ளது.

ஈரான் கடலோர பாதுகாப்பு பிரிவின் மொராத் அபிபூர் கூறுகையில், சவுதி நோக்கி சென்ற பிரிட்டன் கப்பல், ஈரான் துறைமுகமான பந்தார் அப்பாஸ் பகுதி அருகே மீன்பிடி படகுடன் மோதியது. சட்டப்படி, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.
மோதல் சம்பவம் நடந்த உடன், மீன்பிடி படகில் இருந்தவர்கள், எண்ணெய் கப்பலில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், எந்த பதிலும் அளிக்கவில்லை. விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் விசாரணையை துவக்கிவிட்டனர் என்றார்.

இந்த கப்பலில், 18 இந்தியர்கள், 3 ரஷ்யர்கள், லாட்வியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த தலா ஒருவர் என 23 மாலுமிகள் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhithyan - chennai,இந்தியா
21-ஜூலை-201906:40:10 IST Report Abuse
Adhithyan ஒபாமா ஹிலாரி ஆதரவுடன் வளர்ந்த ஈரான் .......டிரம்ப் அதிபராக வந்ததால் உலகம் பிழைத்தது இந்த உண்மையை போலி ஊடகங்கள் மறைத்தாலும் நாளைய வரலாறு சொல்லும் வாழ்க டிரம்ப் .....ஒபாமாவின் துரோகம் இன்று உலகத்தை மிரட்டி கொண்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
20-ஜூலை-201922:52:08 IST Report Abuse
Ganesan Madurai இதுக்கு பேரு படகா உன்ற ஊர்ல?
Rate this:
Share this comment
Cancel
கொடுக்ககு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
20-ஜூலை-201919:46:38 IST Report Abuse
கொடுக்ககு ஒன்றும் பிரச்சினையில்லை , அவர்கள் நம்மவர்களுக்கு டீயோ , காபியோ கொடுத்து , ஒரு விடியோவும் எடுத்துவிட்டு விடுதலை செய்துவிடுவார்கள் . பிறகு நாம் ஆஹா மோடிக்கு பயந்து விடுதலை செய்துவிட்டாக்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் . பொறுமையாக இருப்போம்
Rate this:
Share this comment
sriwilli - jakarta,இந்தோனேசியா
21-ஜூலை-201911:18:08 IST Report Abuse
sriwilliஅங் மோ கியோ லே ....அள்ளுற அய்யா, Iran மற்றும் மேற்கத்திய நாடுகள் பெரிய கேம் விளையாடிக்கிட்டு இருக்கின்றன. நீ மோடி பற்றி பேசற நிலமைல இல்லே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X