பொது செய்தி

இந்தியா

ராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (54)
Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் ராமயணத்தை படிப்பதுடன் ரமலான் நோன்பு இருந்து வருகிறார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செருத்துருதி என்ற ஊர் இருக்கிறது. அங்குள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிபவர் ராய் ஜோசப் வடக்கன். இவர் எம்.பி.ஏ.,எம்.எல் படிப்புகள் முடித்த ஒரு கிறிஸ்துவ பாதிரியார். ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான கார்க்கிடகம் மாதத்தில் ராமாயணம் வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுடன் நோன்பு இருக்கிறார். வகுப்பில் மாணவர்களுக்கு கீதை, குரான் கருத்துகளையும் விளக்கி சொல்கிறார். “இதில் என்ன ஆச்சரியம்? நமது வேதங்கள் அறிவுக் களஞ்சியமாக திகழ்கின்றன. பகவத் கீதை, ராமாயணம் போன்ற நூல்களின் நல்ல போதனைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்த நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்?” என்கிறார் பாதிரியார் ராய் ஜோசப். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த செருத்துருதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துவருபவர் பாதிரியார், ராய் ஜோசப் வடக்கன். இவர் பெங்களூருவில் எம்.பி.ஏ.,வும், தேசிய சட்டபடிப்பும் படித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான கார்க்கிடகம் மாதத்தில் ராமாயணத்தை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இது குறித்து பாதிரியார் ராய் ஜோசப் கூறுகையில், வேதங்கள், அறிவு களஞ்சியமாக உள்ளன. நான் பல ஆண்டுகளாக பகவத் கீதை, ராமாயணம், உட்பட பல்வேறு நூல்களை படித்து வருகிறேன். இதில் உள்ள கருத்துக்களை எனது வகுப்புகளில் பயன்படுத்துகிறேன். இது போன்ற கருத்துக்களை பயன்படுத்த நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்.

ஒரு சிலருக்கு அனைத்து மதங்கள் குறித்து திறந்த மனப்பான்மை இல்லை. உண்மையில் அனைத்து மத நூல்களும் அன்பு, இரக்கம், அமைதி ஆகியவற்றை குறித்து போதிக்கின்றன. தீமைக்கு எதிராக போராடவும் சரியானவற்றிற்கு துணை நிற்கவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ராய் ஜோசப் வடக்கன், மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக முஸ்லீம் சமூக மக்களுடன் இணைந்து ரமலான் மாதத்தில் நோன்பும் இருந்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
21-ஜூலை-201922:10:50 IST Report Abuse
J.Isaac சிவகிரி / சென்னை எழுதுகிறதை தெளிவா எழுதவேண்டியதுதானே .
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-ஜூலை-201914:32:05 IST Report Abuse
Sivagiri இங்கேயும் அதுதான் நடக்குது - - மதம் மாற்றும் கும்பல் குறிப்பா டிஜிஎஸ் க்ரூப் கிறிஸ்டின் சதநாமாவளி / கிறிஸ்டின் சுப்ரபாதம் / கிறிஸ்டின் லட்சார்ச்சனை -( நமோநமஹாவுடன் ) - கிறிஸ்டின் கீர்த்தனைகள் கிறிஸ்டின் கர்நாடக சங்கீத கச்சேரிகள் வீணை என்ன -மிருதங்கம் - நாதஸ்வரம்-தவில்-கஞ்சிரா- ஜெண்டைமேளம் - கிறிஸ்டின் பரதநாட்யம் / கிறிஸ்டின் கதகளி - கிறிஸ்டின் மந்திரங்கள் - அதைவிட உபநிஷத மந்திரங்கள் எல்லாம் கிறிஸ்டின் பைபிளாம் - அசத்தோமா சத்கமய / சஹானாவாவது / சத்யமேவ ஜெயதே / போன்ற மந்திரங்கள் எல்லாம் கிறிஸ்டின் மந்திரங்களாம் இவர்கள் இங்கே இருக்கும் விஷயங்களை இரவில் படித்து விட்டு மறுநாள் அப்பாவி மதம் மாறிய இந்துக்களிடம் பெரிய ஞானிகள் போல கதை அளப்பார்கள் . . . உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு . . . அதான் வெட்கப்படமாட்டோம் என்று சொல்லிட்டானே ஆனா துட்டை அடிச்சிடறாய்ங்க இங்கே உள்ள பகுத்தறிவாளர் க்ரூப்களை விடவா சூடுசொரணை இல்லாத வெட்கங்கெட்ட ஜென்மங்கள்? மனைவி துணைவிகள் - அம்மா மகள் மகன்கள் - கோவில் கோவிலாக உருண்டு வர்ராய்ங்க ஆனா இவிங்க என்னமோ ஸ்பெஷலா அறிவு கொம்பு முளைச்சா மாதிரி என்னா பேச்சு ? ? ?
Rate this:
Share this comment
Cancel
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201913:56:14 IST Report Abuse
Amreen கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்த பிஷப்புக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவன் சொகுஸு வாழ்க்கை வாழ்கிறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X