ராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார்| The Catholic priest who reads Ramayana every year and fasts during Ramzan | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (54)
Share

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் ராமயணத்தை படிப்பதுடன் ரமலான் நோன்பு இருந்து வருகிறார்.latest tamil news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த செருத்துருதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துவருபவர் பாதிரியார், ராய் ஜோசப் வடக்கன். இவர் பெங்களூருவில் எம்.பி.ஏ.,வும், தேசிய சட்டபடிப்பும் படித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான கார்க்கிடகம் மாதத்தில் ராமாயணத்தை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.


latest tamil news
இது குறித்து பாதிரியார் ராய் ஜோசப் கூறுகையில், வேதங்கள், அறிவு களஞ்சியமாக உள்ளன. நான் பல ஆண்டுகளாக பகவத் கீதை, ராமாயணம், உட்பட பல்வேறு நூல்களை படித்து வருகிறேன். இதில் உள்ள கருத்துக்களை எனது வகுப்புகளில் பயன்படுத்துகிறேன். இது போன்ற கருத்துக்களை பயன்படுத்த நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்.

ஒரு சிலருக்கு அனைத்து மதங்கள் குறித்து திறந்த மனப்பான்மை இல்லை. உண்மையில் அனைத்து மத நூல்களும் அன்பு, இரக்கம், அமைதி ஆகியவற்றை குறித்து போதிக்கின்றன. தீமைக்கு எதிராக போராடவும் சரியானவற்றிற்கு துணை நிற்கவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ராய் ஜோசப் வடக்கன், மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக முஸ்லீம் சமூக மக்களுடன் இணைந்து ரமலான் மாதத்தில் நோன்பும் இருந்து வருகிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X