அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நேரடி!
வேலூரில், தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி...
வேறு எந்த கட்சியும் களமிறங்க தயாரில்லை

வேலுார் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், இரு கட்சிகளும், நாளை முதல், வேலுார் தொகுதியில் களமிறங்க உள்ளன.

வேலூர், தி.மு.க.,  அ.தி.மு.க.,  நேரடி போட்டி, கட்சி,


தமிழகத்தில், பணப் பட்டுவாடா விவகாரத்தால் ஒத்திவைக்கப்பட்ட, வேலுார் லோக்சபா தேர்தல், ஆகஸ்ட், 5ல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து உள்ளது.




நாளை, வேட்பாளர் இறுதி பட்டியல், வெளியிடப்பட உள்ளது. ஏப்., 18ல் நடந்த பொதுத் தேர்தலில் பட்ட அடி காரணமாக, அ.ம.மு.க., மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகள், வேலுார் பக்கம் எட்டிப் பார்க்க விரும்பவில்லை.அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், தி.மு.க., சார்பில், அக்கட்சி பொருளாளர்,துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர், மீண்டும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளருக்கு, கூட்டணி கட்சிகளான, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.



தி.மு.க., வேட்பாளருக்கு, காங்கிரஸ், கம்யூ.,

கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. எனவே, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்வியை ஈடுகட்ட,வேலுாரில் வெற்றி பெற்றாக வேண்டும் என, அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.



தமிழகத்தில் படுதோல்வியை தழுவினாலும், மத்தியில், பா.ஜ., பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்துள்ளது. எனவே, தமிழகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரான, ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டும் என்று, பா.ஜ., தலைமையும் விரும்பு கிறது. அடுத்து நடக்க உள்ள சட்டசபை இடைத் தேர்தல்,உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் வெற்றி பெற, வேலுார் வெற்றி கை கொடுக்கும் என்பதால், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற, துடிப்புடன் உள்ளன.




லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மக்கள் ஆதரவு நிரந்தரமாக, தங்கள் பக்கம் உள்ளது என்பதை காட்ட, வேலுாரில் வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயம், தி.மு.க.,விற்கு உள்ளது. மேலும், தேர்தலில் தோல்வி அடைந்தால், தன் மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் என்ற அச்சம், துரைமுருகனுக்கு அதிகம் உள்ளது. அதனால், எப்படியாவது மகனை கரை சேர்க்க வேண்டும்என்று, துடிக்கிறார். இதன் காரணமாக, வேலுாரில் போட்டிகடுமையாகி உள்ளது.




சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்த

Advertisement

நிலையில், அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும், மாவட்ட செயலர்களும், கட்சி நிர்வாகிகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், நாளை முதல், தேர்தல் பணியை துவக்க வேண்டும் என, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.




அதேபோல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள், வேலுாரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற, தி.மு.க., தலைமையும் உத்தரவிட்டுள்ளது.இரு கட்சி பிரமுகர்களும், நாளை முதல், வேலுார் லோக்சபா தொகுதியில், வீதி வீதியாக வலம் வர உள்ளனர்.





எனவே,இரு கட்சியினரும், பணத்தை இறைக்க தயாராகி வருகின்றனர்;பட்டுவாடாவை தடுக்க, வழக்கம் போல படை பலத்துடன் காத்து இருக்கிறது, தேர்தல் ஆணையம்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-ஜூலை-201915:00:58 IST Report Abuse

இந்தியன் kumarஇருவரும் தோற்றால் அது ஒரு மாபெரும் சாதனை.

Rate this:
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201901:50:27 IST Report Abuse

ESSENதி மு க தொண்டர்கள் இல்லை இல்லை ,கோபாலபுரம் வாரிசு கட்சி தூக்கிகள் பாவம்

Rate this:
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஜூலை-201920:48:44 IST Report Abuse

chinnamanibalanதமிழக மக்களுக்கு இடைத்தேர்தல் என்றாலே ஜாக்பாட் விழாதான். இரு தரப்பிலும் கவனிப்பு அதிகம் இருந்தாலும், எங்கு வெயிட்டாக வழங்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். தமிழகம் சிந்திக்கும் ஆற்றலை எப்போதோ இழந்து விட்டது வேதனைதான்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X