பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி வேண்டும் : பாக்.,கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
Hafiz Saeed, arrest, window dressing, US, Pakistan, பயங்கரவாத எதிர்ப்பு, உறுதி, பாக்., அமெரிக்கா, எச்சரிக்கை

வாஷிங்டன்: 'ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஹபீஸ் சயீத்தை கைது செய்திருப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது என்பதை காட்டிக் கொள்ளும் நிகழ்வாக மட்டும் இல்லாமல், இந்த நடவடிக்கைகள், மாற்றமின்றி, உறுதியாகவும், நிலையாகவும் தொடர வேண்டும்' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே, பாக்., அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, பாக்., செயல்படுவதை நிறுத்த வேண்டும் என, அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாக்.,குக்கு வழங்கப்பட்டு வந்த, பாதுகாப்பு நிதி உதவியை, டிரம்ப் நிறுத்தினார்.

இந்நிலையில், பாக்., பிரதமர் இம்ரான் கான், அலுவல் முறை பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவருடன், பாக்., ராணுவ தளபதி, கமர் ஜாவித் பஜ்வா, அந்நாட்டு உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர், பைஸ் அகமதுவும் உடன் செல்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, வெள்ளை மாளிகையில் நாளை மறுநாள்(ஜூலை 22), பாக்., பிரதமர், இம்ரான் கான் சந்தித்து பேசுகிறார்.


latest tamil news




அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பயங்கரவாதம் தொடர்பான தங்கள் கொள்கைகளை, பாக்., அரசு மாற்றிக் கொள்ள முன் வந்தால், அமெரிக்கா - பாக்., உறவு, சீர் செய்யப்படும்.சில பயங்கரவாத குழுக்களின் சொத்துக்களை, பாக்., அரசு பறிமுதல் செய்திருக்கிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத குழுவின் தலைவர், ஹபீஸ் சயீத்தை கைது செய்துள்ளது.இவரை, பாக்., அரசு, 2001 முதல், இதுவரை ஏழு முறை கைது செய்து, விடுவித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.


latest tamil news




எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக, பாக்., செயல்படுகிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக மட்டுமே, இந்த நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. இதில், மாற்றம் ஏதும் இல்லாமல், நிலையாகவும், உறுதியாகவும் தொடர்வது அவசியம். அதை, அமெரிக்கா கவனித்துக் கொண்டிருக்கிறது.பாக்.,குக்கு வழங்கி வந்த, பாதுகாப்பு நிதி உதவியை, 2018ல், அமெரிக்கா நிறுத்தியது. அந்த முடிவில், இதுவரை மாற்றமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-201911:41:46 IST Report Abuse
அருண் பிரகாஷ் பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள் என்ற முதுமொழி உண்டு..முன்னர் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் செய்யும் தீவிரவாத நடவடிக்கையை சுத்தமான பிச்சை பாத்திரம் என்று அமெரிக்கா ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு நிதியுதவியை பயங்கரவாத எதிர்ப்பு நிதி என்ற போர்வையில் இந்திய எல்லை தாண்டி தாக்குதல் என்ற பயங்கரவாத ஆதரவுக்கு அளித்து வந்தது. ஆனால் அது முந்தைய மன்மோகன் ஆட்சி.. ஆனால் இப்போ நடப்பது மோடி ஆட்சி எல்லா உண்மையும் நன்கு தெரிந்தும் அமைதியாக இல்லாமல் அமெரிக்காவிற்கு மறைமுகமாக தக்க பாடம் அளித்தார்.எனவே பயங்கரவாத ஒழிப்பு நிதி கொடுப்பதை அமெரிக்கா நிறுத்தியது.இந்தியாவும் புல்வாமா தாக்குதலுக்கு பின் இறக்குமதி வரியை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.பாகிஸ்தானின் பொருளாதார நிலை இப்போ அகல பாதாளம். எனவே இப்போ இவரை கைது செய்து பிச்சை பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு அமெரிக்காவிடம் பிச்சை கேட்டு கிளம்பி விட்டார்கள்.ஆனால் இன்னும் 5 ஆண்டுகள் மோடி ஆட்சிதான்.எனவே அமெரிக்கா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவு.இந்தியாவின் நட்புறவு கெடுவதால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கிறது. இனி பாகிஸ்தானின் நரி தந்திரம் பலிக்க வாய்ப்புகள் இல்லை.திருந்தினால் அவர்களுக்கு நல்லது..
Rate this:
Cancel
Ramesh Rangarajan - DC,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-201923:21:35 IST Report Abuse
Ramesh Rangarajan இதற்க்கு முந்தய அமெரிக்க ஆட்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமே ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இன்றைய இந்திய பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் இவர்களின் தீவிரவாத எதிர்ப்பினால் இன்று அமெரிக்காவிடமிருந்து 'வெளி வேஷம் வேண்டாம் வேலையைச் செய்யுங்கள்' என்ற செய்தி பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீவிரவாத வாலை சுருட்டி உருப்பட வழிதேடுமா பக்கி ?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜூலை-201922:04:05 IST Report Abuse
 Muruga Vel ட்ரம்ப மண்டை காய விட பாகிஸ்தான் பிரதமர் மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X