பதிவு செய்த நாள் :
இழுபறி!
காங்., தலைவரை தேர்ந்தெடுப்பதில்...
ஒருமித்த கருத்து எட்டப்படாததால் குழப்பம்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது, தாமதமாகிறது.ஒருமித்த கருத்து ஏற்படாததால், குழப்பம் தொடர்வதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூத்த தலைவர்கள் - ராகுலை ஆதரிக்கும் இளம் தலைவர்கள் என, கட்சி இரண்டாக பிளவுபட்டு இருப்பதாலும், உடனடியாக முடிவு எடுக்க முடியாமல், கட்சி தலைமை திணறுவதாக கூறப்படுகிறது.

இழுபறி,காங்., தலைவர்,குழப்பம், ராகுல்
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்ததை அடுத்து, அதற்கு முழு பொறுப்பேற்பதாக கூறி, கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் அறிவித்தார்.கட்சியின் மூத்த தலைவர்கள், அவரை சமாதானம் செய்தும், தன் முடிவில், இன்று வரை உறுதியாக உள்ளார். இதையடுத்து, 133 ஆண்டுகள் வரலாறு உடைய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.காங்., செயற்குழு கூடி, அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் ராஜினாமா செய்து ஏழு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், செயற்குழு இதுவரை கூட்டப்படவில்லை. அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில், கட்சி தலைமைக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததே இந்த இழுபறி நிலைக்கு காரணம் என, கூறப்படுகிறது. காங்., மேலிடம், இரண்டாக பிளவுபட்டு கிடப்பதால், இந்த குழப்பம் நீடிப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.
வலியுறுத்தல்


சோனியாவின் விசுவாசிகளான மூத்த தலைவர்கள் ஒரு குழுவாகவும், கட்சியில் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துடைய ராகுலை ஆதரிக்கும் இளம் தலைவர்கள் இன்னொரு

குழுவாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் மூத்த தலைவர்கள் குழுவை பொருத்தவரை, நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சி தலைவர் பொறுப்பை வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதில் ராகுலுக்கு மாற்று கருத்து உள்ளது.அவரது ராஜினாமா கடிதத்திலேயே, 'நேரு குடும்பத்தை சாராத ஒருவர், கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்' என, தெளிவாககுறிப்பிட்டுள்ளார்.
மூத்த தலைவர்களை பொருத்தவரை, பா.ஜ.,வில் நரேந்திர மோடி, அமித் ஷா தலைமை பொறுப்புக்கு வந்த பின்,இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமூகத்தினரின் ஓட்டுகளை, அக்கட்சி கணிசமாக பெற்றுள்ளது. அதனால், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை, தலைமை பதவிக்கு கொண்டு வர அவர்கள் விரும்புகின்றனர். இதில், மூத்த தலைவர்கள், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பெயர்கள், பட்டியலில் உள்ளன.

ஆனால், இவர்களை, இளம் தலைவர்கள் ஏற்கவில்லை. இரண்டு தலைவர்களுமே 75 வயதை கடந்து விட்டதால், இளம் தலைவரை நியமிக்க வேண்டும் என்பது, அவர்களின் கருத்தாக உள்ளது. எனவே, ம.பி.,யை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தானை சேர்ந்த சச்சின் பைலட், மஹாராஷ்டிராவை சேர்ந்த மிலிந்த் தியோரா ஆகியோர், இளைய தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். காங்., தலைவர் பதவியை ஏற்பதில், இளம் தலைமுறை தலைவர்கள் மத்தி யில் தயக்கம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
அதிகார மையங்கள்


காரணம், சோனியா, ராகுல், பிரியங்கா என, காங்.,கில் தற்போது 3 அதிகார மையங்கள் உள்ளன. எனவே, தலைவராக பதவி ஏற்பவர், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்றாலும், மூவரின் ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்படும் என்பதே, தயக்கத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாகவும், கட்சிக்குள் குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின்

Advertisement

மகன், அபிஜித் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர், அனில் சாஸ்திரி ஆகியோர், பிரியங்காவுக்கு ஆதரவாக, பேசி வருகின்றனர். ‛இந்திரா தலைவராக பொறுப்பேற்ற பின், காங்.,கை வழிநடத்தி சென்றதை போல, பிரியங்கா சாதிப்பார்' என, அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், மிக மோசமான நிலையில் உள்ள காங்., மீண்டும் புத்துயிர் பெற வேண்டு
மானால், சோனியா தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என, தெலுங்கானா காங்.,
தலைவர்கள், சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எது எப்படியானாலும், தலைவர் இல்லாமல் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பது, தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை குறைத்துள்ளது.
இடைக்கால தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு!


லோக்சபா கூட்ட தொடர் நடைபெறுவதால், காங்., செயற்குழு கூட்டம் தள்ளிப்போவதாக, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.வரும், 26ல் பார்லி., கூட்டம் முடிவடையலாம் என சொல்லப்படும் நிலையில், அதற்கு அடுத்த சில நாட்களில், செயற்குழு கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்குழுவில், இடைக்கால தலைவ ராக ஒருவர் நியமிக்கப் படுவார் என்றும், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடியும் வரை, அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது.இடைக்கால தலைவராக, முகுல் வாஸ்னிக் தேர்ந்தெடுக்க பட வாய்ப்பு உள்ளதாக,கட்சிவட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-ஜூலை-201917:28:24 IST Report Abuse

Poongavoor RaghupathyCongress Leaders must now wind up this Party and who so ever wants from Congress can join BJP. Such an eminent Congress Financial Wizard Mr Chidambaram can also take up the Leadership of Congress and nobody is proposing his name. It is a pity that an ancient Party who fought for India's freedom is in a dilapidated sinking boat because of Rahul's immaturity. But for a healthy democracy we need a strong opposition to BJP and it is now missing in India. India is entirely relying on Modi with lots of burden on his shoulders and whether he would be able to provide good days to our people in over populated Country India is a big question. Time alone can tell us how far Modi will be effective.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-201918:22:42 IST Report Abuse

Endrum Indianநம்மை புறம் தள்ளி விடுவார்களோ என்று முஸ்லீம் நேரு குடும்பத்தினர் எண்ணியதின் (ஏன்னா நல்லவன் தன் எதிரில் உள்ளவன் நல்லவன் என்று நினைப்பான், கெட்டவன் தன் எதிரில் உள்ள எல்லோரையும் கெட்டவன் என்றே நினைப்பான்) ,விளைவு தான் இந்த அளவு லேட்டுக்கு காரணம். ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாத இந்த நேரு காங்கிரஸ் எப்படி இந்த இந்தியாவை ஆள பேராசைப்படுகின்றது???

Rate this:
21-ஜூலை-201918:05:54 IST Report Abuse

KN GopalanRahul can become CM of Karnataka n save the govt.there. Get some experience before trying to become PM!!!

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X