சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நம் மரணமும் இப்படித்தானா?'

Added : ஜூலை 20, 2019
Advertisement

தொடர்ச்சியா கண்காணிப்பு கேமரா இருந்ததால தான், எல்லா சிக்னல்லேயும் சிவன் ஏகப்பட்ட வண்டிகளை முந்திட்டு வந்ததை கண்டுபிடிக்க முடிஞ்சது. தவிர, சாலை விதிகளை மதிக்காம மூணு பேர் வண்டியில வந்தது தப்பு. சிவன் மட்டும் தான் ஹெல்மெட் போட்டிருந்தார். பின்னாடி இருந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் ஹெல்மெட் போடலை. அவங்க மரணத்துக்கு இதுவும் ஒரு காரணம்!'அப்புறம் என்னப்பா... அதான், காவல் துறையே சொல்லிடுச்சு; அதை அப்படியே வாங்கி, ஊடகங்களும் நம்மகிட்டே ஊதிடுச்சு. அவ்வளவு தான்... இது முடிஞ்சு போச்சு; போங்க... போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க!'அப்படியெல்லாம் போக முடியாது; இது சம்பந்தமா பேச வேண்டியது நிறைய இருக்கு!' - இப்படி உன் மனசாட்சி உன்கிட்டே சொல்லுச்சா தமிழா?

சில உண்மைகள்

சென்னை, நந்தனம் விபத்தில் சிக்குன இருசக்கர வாகனத்துல, மூணு பேர் பயணம் பண்ணினது தப்பு தான். ஆனா, அசுர வேகத்துல பல சிக்னல்களை அந்த வண்டி தாண்டி வந்தப்போ, எந்த போக்குவரத்து காவலரும் அந்த வண்டியை தடுக்கலையே... அது ஏன்; போக்குவரத்து காவலர்கள் யாரும் பணியில இல்லையா; பணியில இல்லேன்னா, அது தப்பு; பணியில இருந்தும் கண்டும் காணாம இருந்திருந்தா, அது ரொம்ப தப்பு; நடந்தது என்ன?நகரம் முழுக்க வைச்சிருக்கிற கண்காணிப்பு கேமராக்களோட நோக்கம்... குற்றங்களும், விபத்துகளும் நடக்காம தடுக்குறதா; இல்ல... விபத்தும், குற்றமும் எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சுக்கிறதா; இந்த விபத்து மூலமா சில உண்மைகள் அப்பட்டமா வெளிச்சத்துக்கு வந்திடுச்சு; அதாவது... போக்குவரத்து விதிகளை மீறுற வாகனங்கள் அத்தனையும் கண்காணிக்கப்படுறதில்லை.

உண்மை தானே?

அக்கிரமங்கள் ஆயிரம்நிகழ்ந்த விபத்துக்கு வாகனத்தை ஓட்டிட்டு வந்த சிவன் தான் காரணம்னா, எதுக்காக அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கணும். அவர் கைதுக்குரியவர்னா, சாலை விதிகளை மீறி அத்தனை சிக்னல்களை கடந்து வர்றதுக்கு அவங்களை அனுமதிச்ச போக்குவரத்து காவலர்களுக்கு என்ன தண்டனை; அவர்களுக்கான தலைமைக்கு என்ன தண்டனை?'ஸ்மார்ட் சிட்டி' ஆக்குறோம்னு நடைபாதைகளை அகலமாக்கி, சாலைகளை சந்து மாதிரி ஆக்கியாச்சு. 'நடைபாதை நடப்பதற்கே'ங்கிற உலக தத்துவத்தோட, பத்தடிக்கு ஒரு அறிவிப்பு பலகையும் வைச்சாச்சு. ஆனா, அந்த நடைபாதை முழுக்க கடைகளும், வாகனங்களும் ஆக்கிரமிச்சிருக்கு. நடைபாதையை பயன்படுத்த வேண்டிய பாதசாரிகள் சாலையில இறங்கி நடக்குறாங்க. ஹெல்மெட் போடாத ஆட்களை தேடித்தேடி பிடிக்கிற போக்குவரத்து காவல் துறைக்கு, இந்த அக்கிரமங்கள் கண்ணுக்குத் தெரியலையா?

கொஞ்சம் மாத்தி யோசிப்போம்; ஒருவேளை... அரசு பேருந்துக்கும் இரு சக்கர வாகனத்துக்கும் இடையில புகுந்ததுக்கு பதிலா, அந்த இரு சக்கர வாகன ஓட்டியோட இடதுபக்கமா வந்து சிவன் அவரை தட்டி விட்டிருந்தா, விபத்துல அந்த வாகன ஓட்டி சிக்கியிருப்பார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்து, சம்பந்தப்பட்ட மூணு பேரையும் கைது பண்ணியிருப்பீங்க; பேட்டி கொடுத்திருப்பீங்க! சரி... விபத்துல சிக்குனவரோட குடும்ப நிலைமை?என்ன நடந்திருக்கு?இது எல்லாத்தையும் விடுங்க; விபத்துக்கு சில வினாடிகள் முன்னாடி, அந்த சந்துக்குள்ளே இருந்து ஒரு ஆட்டோ, 'சடார்'னு திரும்புச்சே... அந்த ஆட்டோ எதுன்னு தேடி டிரைவரை பிடிச்சிட்டீங்களா! 'பிரதான சாலைக்குள்ளே நுழையுறப்போ, இரண்டு பக்கமும் பார்த்து நிதானமா வரணும்; நீ வந்தது தப்பு'ன்னு, அவர் மேல ஏதாவது வழக்கு பதிவு பண்ணியிருக்கீங்களா?நடந்தது நடந்து போச்சு. இனிமே, இன்னொரு விபத்து இந்த மாதிரி நடந்துடக்கூடாதுன்னு மனசாட்சியோட முடிவெடுத்து, 'போக்குவரத்து விதிகளை தீவிரமா அமல்படுத்துற உத்தரவு வேணும்'னு, முதல்வருக்கு தெரியப்படுத்திட்டீங்களா; பரபரப்பான போக்குவரத்து இருக்குற சாலை ஓரங்கள்ல, எக்காரணத்தை கொண்டு வாகனங்களை நிறுத்தக்கூடாதுங்கிற கட்டுப்பாட்டை கொண்டு வரப் போறீங்களா?

நடைபாதை ஆக்கிரமிப்புகளை எந்த தேதிக்குள்ளே அகற்றப் போறீங்க; எந்த போக்குவரத்து விதியையும் மதிக்காத, அடாவடி ஆட்டோக்காரர்கள் மேல, என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க? பேருந்து நிறுத்தத்துல பேருந்தை நிறுத்தாத, அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மேல நடவடிக்கை உண்டா?உயிர் வேணுமா?'அமைச்சர் வர்றார்; ஆளுநர் வர்றார்; வழி விடுங்க'ன்னு சொல்லி, அவங்க வாகனம் போறதுக்கான பாதையை சுத்தப்படுத்தி, அவங்களுக்கும் உங்களுக்கும் சம்பளம் கொடுக்குற எஜமானர்களான எங்களை, 'ஏய்... ஓரமா போ; ஏய்... வண்டியை நிப்பாட்டு'ன்னு ஏக வசனத்துல பேசுற உங்களை, உங்க மனசாட்சியை, இறந்து போன இரண்டு பெண்களோட ஆன்மா, இன்னுமா கேள்வி கேட்கலை!'மூணு பேரா வந்ததும், வேகமா வந்ததும், ஹெல்மெட் போடாம இருந்ததும் தான், பவானி - நாகலஷ்மி மரணத்துக்கு காரணம்'னு இன்னும் நீங்க சொல்றதா இருந்தா... சென்னையோட பிரதான சாலையான அண்ணாசாலையில, எத்தனை இடங்கள்ல, 'ஸீப்ரா லைன்'னு சொல்லப்படுற வெள்ளைக்கோடுகள் தெரியுதுன்னு பாருங்க.

ஆனா, எல்லா சிக்னல்லேயும் நீங்க வைச்சிருக்கிற அறிவிப்பு பலகைகள், 'அந்த கோடுகள் மேல தான் பாதசாரிகள் சாலையை கடக்கணும்'னு சொல்லுது.பயமா இருக்குங்க; இந்த நரகத்துல வாகனம் ஓட்ட ரொம்பவே பயமா இருக்கு! வெளிப்படையா சொல்லுங்க... எங்க பயணங்கள் பாதுகாப்பானதா இருக்க, இன்னும் எத்தனை உயிர் வேணும்?

- வாஞ்சிநாதன்vanjinath40@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X