பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஹிந்தி திணிப்பு எதிலும் இல்லை:
நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

சென்னை:''தமிழகத்தில் பல விதத்திலும், ஹிந்தி திணிப்பு இருப்பதாக கூறுவது, தவறான குற்றச்சாட்டு; இங்கு, எங்கும், எதிலும், ஹிந்தி திணிப்பு என்பதே இல்லை,'' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சர்வதேச நகரத்தார் வர்த்தக மாநாடு, சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து, நிர்மலா சீதாராமன் பேசியதாவது:



பிரமாண்டம்




மத்திய பட்ஜெட்டின் முழு விபரங்கள், நகரத்தாருக்கு மட்டுமே தெரியும். தென்கிழக்கு ஆசியாவின், வியட்நாம், கம்போடியா உட்பட, பல நாடுகளில் உள்ள சின்னங்கள், கலாசாரங்கள் போன்றவை, நகரத்தாரால் உருவாக்கப்பட்டவை.





தஞ்சாவூர் கோவில் போல, தென் கிழக்கு ஆசியாவில், பல கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம், ஹிந்தி திணிப்பு என, எவ்வளவு பேசினாலும், ஒரே நாடு;ஒரே இந்தியா தான்.நம் தலைமுறைக்கு சொத்துக்களை சேர்த்து வைப்பது மட்டுமல்ல; பண்பையும்,

பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை, நமக்கு உள்ளது.



பிரதமர் மோடி சொல்வது போல, நம்மிடையே வணிகம், தொழில்நுட்பம் உட்பட, அனைத்து வகையான திறமைகளும் இருக்கின்றன. இதனால் தான், அடுத்து வரும் தலைமுறையினருக்கு, நாம் விஸ்வ குருவாக இருக்க முடியும்.நாட்டில் இருக்கக்கூடிய கல்வி தரம் காரண மாக, அரசு உதவிகள் இல்லாதபோதே, நாம் வர்த்தக ரீதியாகமுன்னிலை யில் இருந்தோம். இயற்கையாகவே, நம் மரபணுவில், அந்த திறன் இருக்கிறது.




நாட்டில் உள்ள, அனைத்து சட்ட திட்டங்களையும் மதித்து, அதன் வழியே செல்வதால் தான், நம் திறமைகளை அனைவருக்கும் தெரியும் வகையில், வெளிகொண்டு வர முடியும்.தொழில் செய்ய, அனைத்து உதவிகளையும், அரசு செய்தாலும், வரி உள்ளிட்டவற்றை, கவனமாக கையாள்வது, நமக்குள் இருக்கும் திறமை வாயிலாகவே முடியும்.




அதிக பயன்




தொழில் செய்ய, அரசு என்ன உதவி செய்தது என்பதை பற்றி பேசுவதை விட, அரசுடன் இணைந்து,முறையான பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.இந்திய வளர்ச்சிக்கு, இளைஞர்கள் தொழில் செய்வது, மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மேலும், இந்த பட்ஜெட்டில், தொழில் முனைவோருக்கு, அதிகளவு

Advertisement

பயன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.இந்த மாநாட்டில், தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை, நகரத்தார் வர்த்தக சபை தலைவர், வெங்கட் அண்ணாமலை உட்பட, பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின், நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:




தமிழகத்தில், பல விதத்திலும், ஹிந்தி திணிப்பு இருப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு; இங்கு எந்த வகையிலும், ஹிந்தி திணிப்பு இல்லை. மேலும், மோடி அரசில், 'ஸ்ரேஷ்ட பாரத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, வட மாநிலத்தில், தமிழ் கற்று தரப்படுகிறது.



'ஜீரோ' பட்ஜெட் என்ற, இயற்கை சார்ந்த விவசாயம் குறித்து, சுதந்திர நாட்டில், யார் எந்த கருத்தும் சொல்லலாம். அதை சிறப்பாக செயல்படுத்தி, விவசாயிகளின் வருவாயை, இரு மடங்காக மாற்றிய மாநிலங்களும் எடுத்துக்காட்டாக உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.




இது சூட்கேஸ் அரசு அல்ல!

நிர்மலா பேசும்போது, ''பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சூட்கேஸ் எடுத்து செல்லாதது, மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டது. சூட்கேஸ் என்றால், எனக்கு வேறு ஒன்று நினைவுக்கு வருகிறது. சூட்கேஸ் கொடுத்து, வாங்கும் முறை, இந்த அரசிடம் இல்லை. மோடி அரசு, சூட்கேஸ் துாக்கும் அரசு இல்லையே என்றும், எனக்கு தோன்றியது. அதனால், பட்ஜெட் உரையை, நான் சூட்கேஸில் எடுத்து செல்லவில்லை,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-201912:19:37 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஹிந்தியர்கள் பானிபூரி விற்பதில், மாநிலம் தாண்டி வந்து கொலை கொள்ளை செய்வதில், மட்டும் தான் முன்னேறுகிறார்கள்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-201912:17:02 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்உங்களுக்கு பிடிச்சதை நீங்க வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-201905:55:38 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஆனா ராத்திரி டிபனுக்கு உப்புமா மட்டும் தான் கிண்டியிருக்கார். ...

Rate this:
rajan - erode,இந்தியா
21-ஜூலை-201914:47:31 IST Report Abuse

rajanபொய்யை தவிர வேறு பேச தெரியாத அக்கா. முன்பு நீட் தேர்வு ரத்து சம்பந்தமாக சட்டம் வரப்போகுது என்றார் இந்த அக்கா

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
21-ஜூலை-201916:41:20 IST Report Abuse

karupanasamyஆமாம் நீ உண்ம வெளம்பி ...

Rate this:
செந்தூரன் - தொண்டி,இந்தியா
22-ஜூலை-201916:00:04 IST Report Abuse

செந்தூரன்அவங்க சொன்னது, ஒரு வருடத்துக்கு தேர்விலிருந்து விலக்கு. அதை வாங்கியும் குடுத்தாங்க இவங்க. ஆனா, அதை இங்க உள்ள கட்சிகள் தேர்வு ரத்துன்னு மீடியாக்கள் மூலமா தவறா பிரச்சாரம் செஞ்சா, அவங்க எப்படி அதுக்கு பொறுப்பாக முடியும்? மீடியா இன்னிக்கி யார் கையில இருக்குதுங்கறது தான் உள்ளங்கை நெல்லிக்கனியாச்சே. அதனால இந்த மாதிரி உட்டாலக்கடி வேலை எல்லாம் இனி செய்யாம நெசமாவே வாழ்க்கையில ஒரே ஒரு முறையாவது உண்மை பேசிப் பழகு ராசா. ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X