தமிழ்நாடு

மழை நீர்... குடிநீர்! எதிர்கால தேவைக்கு சேமிக்க வேண்டும்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 20, 2019
Advertisement
 மழை நீர்... குடிநீர்!  எதிர்கால தேவைக்கு சேமிக்க வேண்டும்

திருப்பூர்:''எதிர்கால குடிநீர் தேவைகளை சமாளிக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு அதிகாரி அபுஜித் முகான் அறிவுறுத்தியுள்ளார்.மத்திய அரசு, தண்ணீர் வளம் குறைவாக உள்ள மாவட்டங்களில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, ஜல் சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, மூன்று கட்டமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.'ஜல்சக்தி அபியான்' திட்ட குழு உறுப்பினர் அபுஜித் முகான், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார்.வெள்ளகோவில், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.
திருப்பூர் ஒன்றியத்தில், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சிகளில், மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நாட்டு வேம்பு மற்றும் நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அரசு கட்டடங்களில் அமைத்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், பண்ணைக்குட்டை மற்றும் ஆழ்குழாய் கிணற்றை செறிவூட்டும் கட்டமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். மத்திய குழு அதிகாரிஅபுஜித் முகான் பேசுகையில், ''பருவமழை குறைந்து கொண்டே இருப்பதால், எதிர்கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது.
சிறிய மழை பெய்தாலும், மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை செறிவூட்ட வேண்டும். அதற்காகவே, 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு நாடு முழுவதும் ஆய்வு செய்கிறது. எதிர்கால தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிதி ஆதாரம் தேவையெனில், கலெக்டர் மூலம், 'ஜல்சக்தி அபியான்' குழுவுக்கு பரிந்துரை செய்தால், தேவையான நிதி பெற்றுத்தரப்படும்,'' என்றார்.
ஆய்வின் போது, பி.டி.ஓ.,க்கள் கனகராஜ், மகுடேஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ, மண்டல துணை பி.டி.ஓ., இந்துமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட அதிகாரிகள் 'கொர்ர்...''ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு, திருப்பூருக்கு வந்திருந்த போதும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சரியான முறையில் அணுகவில்லை. மத்திய குழு வருகை குறித்து, அரசுத்துறை உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கும் தகவல் இல்லை; ஆலோசனை கூட்டம் நடந்ததாக, தாமதமாக அறிவித்த பிறகுதான், மத்திய குழு வருகை, வெளியே தெரியவந்தது.
மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடன் வரவே இல்லை. மத்திய அரசின் திட்டம் என்று, 'அசட்டை'யாக இருக்காமல், தேவையான வழிகாட்டுதல்களை பெற்று, இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த, கலெக்டர் சாட்டையை சுழற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X