அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ஜ., பக்கம் சாய்கிறதா? தி.மு.க., மீது சந்தேக கோடு!

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தத்தை, ஆதரிக்காமல், லோக்சபா நிலைக்
குழுவில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ராஜ்யசபாவில்
கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 பா.ஜ., பக்கம் ,சாய்கிறதா?, தி.மு.க., மீது, சந்தேக கோடு!


அதுபோல், தி.மு.க.,வும் நிலைப்பாடு எடுக்காமல், மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தது, பா.ஜ., பக்கம், அக்கட்சி சாய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில், அமோக வெற்றி பெற்றது.



வலியுறுத்தல்



இந்தக் கூட்டணி நீடிக்கக் கூடாது என்றும், காங்கிரஸ் கட்சியை, தி.மு.க., கூட்டணியிலிருந்து கழற்றி விட வேண்டும் என்றும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு, காய்களை நகர்த்த துவங்கி உள்ளது.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,விடம் அதிக இடங்களை கேட்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் விவாதங்களில் கொம்பு சீவி விடப்படுகிறது. 'உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்' என, அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.



இதனால், காங்கிரஸ் மீது, தி.மு.க., மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. அதேபோல், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, ராஜ்யசபா, எம்.பி., பதவி தரவில்லை என்ற அதிருப்தி, தி.மு.க., மீது காங்கிரஸ் மேலிடத்திற்கு உள்ளது.



எனவே, நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., இளைஞரணி

தலைவர் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்தும், அத்தொகுதியில், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி. மேலும், அது, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில், தமிழக காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.



மன்மோகன் சிங்கிற்கு,ராஜ்யசபா, எம்.பி., பதவியை, தி.மு.க., கொடுத்திருந்தால், நாங்குநேரியை காங்கிரசும் விட்டுக்கொடுத்து இருக்கும்.'தி.மு.க., விட்டுக் கொடுக்காத பட்சத்தில், நாம் எதற்காக கொடுக்க வேண்டும்' என்ற கேள்வியை, காங்கிரசார் எழுப்புகின்றனர்.


ஆதரவு





வேலுார் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான வாலாஜாபாத் அசேன், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு எதிராக போட்டியிடுகிறார். அவர், வாபஸ் பெற வேண்டும் என, தமிழக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தியும், வாலாஜாபாத் அசேன், மறுத்து வருகிறார்.தி.மு.க., வேட்பாளராக, கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்ட பின், அவர், தமிழக
காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆதரவு கேட்கவில்லை என்ற, அதிருப்தியும் நீடிக்கிறது.



அடுத்த மாதம், 7ம் தேதி, சென்னை, முரசொலி அலுவலகத்தில் நடக்கும், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்படி, தி.மு.க., - காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் வேளையில், லோக்சபாவில், மத்திய அரசு கொண்டு வந்த, தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தத்தை, தி.மு.க., ஆதரித்திருப்பது, அதன் கூட்டணிக் கட்சிகளிடம்சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட, தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தத்தை, ராஜ்ய சபாவில், கம்யூனிஸ்ட் கட்சியின், எம்.பி.,க்கள்

Advertisement

ஆதரிக்காமல், 'லோக்சபா நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, வெளிநடப்பு செய்துள்ளனர். கம்யூ., கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டை, தி.மு.க., எடுக்காமல், பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து உள்ளதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது.




அதாவது, பா.ஜ., பக்கம் தி.மு.க., மெல்ல சாய்கிறது. மற்ற கட்சி, எம்.பி.,க்கள் கோரிக்கைகளை, மத்திய அமைச்சர்கள் கண்டுகொள்வதில்லை.ஆனால், தி.மு.க., - எம்.பி., க்களின் கோரிக்கைகளை, உடனுக்கு உடன் நிறைவேற்ற,மத்திய அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.



அறிக்கை





பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுடன், ஸ்டாலின் குடும்பஉறுப்பினர் ஒருவர் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். இது, தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கும், சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில், லோக்சபா, தி.மு.க., கொறடா, ஆ.ராஜா விளக்கம் அளித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.



அதில், 'சிறுபான்மை மக்கள் மீது, தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டம், தவறாக பயன் படுத்தக் கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்,இச்சட்டத் தில் வழிவகை காண வேண்டும் என, லோக் சபாவில், நான் பேசியுள்ளேன்' என, கூறி உள்ளார்.இவ்வாறு, காங்.,வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
24-ஜூலை-201905:20:08 IST Report Abuse

jayananthamஅரசியல் லாபத்துக்காகவும், தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் கொலைகள் செய்ய அஞ்சாத பாவிகள் நிறைந்த திருடர் கூட்டம்

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201904:04:52 IST Report Abuse

skv srinivasankrishnaveniஐயையோ வேண்டாமுங்கோ இந்திராவை ஏசிய முக, சோனியாக்கூட கூட்டணி வச்சாங்க காங்கிரஸ் இப்போது அம்போ ன்னு போயாச்சு பிஜேபி ப்ளீஸ் வேண்டாமையா விஷபரீக்ஷை கூட்டு இவாகூட அதிமுககூடவும் வேண்டாமையா ரெண்டும் விஷங்கள் தமிழ்நாடு இன்று இந்த அளவு நாசமாக்க அண்ட் பரிதவிக்க இதுகளேதான் முக்கிய காரணம்

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-ஜூலை-201903:27:57 IST Report Abuse

BoochiMarunthuநல்ல கற்பனை .

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X