பதிவு செய்த நாள் :
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு சிக்கல்
மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

பெங்களூரு:கர்நாடகா அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தும் முதல்வர் குமாரசாமி அதை மதிக்கவில்லை. இதனால் 'அரசியல் சாசனம் மீறப்பட்டு அரசை 'டிஸ்மிஸ்' செய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என மத்திய உள்துறை செயலருக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

கர்நாடகா, குமாரசாமி, அரசு, சிக்கல்,  மத்திய அரசு, கவர்னர், அறிக்கை


கர்நாடகாவில் ஆளுங்கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மும்பையில் தங்கியுள்ளனர். இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.- எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி வருகின்றனர்.




இந்நிலையில் குமாரசாமி தன் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி 18ம் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் 19 வரை விவாதம் மட்டுமே நடந்தது. சட்டசபை

நிகழ்வுகளை பார்க்க தன் செயலரை அனுப்பி இருந்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் விஷயம் திசை மாறுவதை அறிந்த கவர்னர் நேற்று முன்தினம் பகல் 1:30 மணிக்குள் பெரும் பான்மையை நிரூபிக்கும்படி குமாரசாமிக்கு உத்தர விட்டார்.ஆனால்பெரும்பான்மையை நிரூபிப்பதில் அக்கறை காட்டா மல் சபாநாயகர் அனுமதியளித் தால் ஓட்டெடுப்பு நடத்துவதாக கூறி முதல்வர் நழுவினார்.



உடனே நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்கும்படி இரண்டாவது கடிதம் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. இதையும் குமாரசாமி புறக்கணித்தார். திங்கட்கிழமை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பதாக முதல்வர் அறிவித்தார்.


கவர்னர் அறிக்கை




தான் அனுப்பிய இரண்டு கடிதங்களையும் முதல்வர் புறக்கணித்ததால் கவர்னர் அதிருப்தியடைந்து உள்ளார். இதனால் 'முதல்வர்குமாரசாமி அரசியல் சாசனத்தை மீறியுள்ளார்; மாநிலத்தில் சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது' என கவர்னர் வஜுபாய் வாலா மத்திய உள்துறை செயலருக்கு நேற்று அறிக்கை அனுப்பினார்.



அறிக்கையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி

Advertisement

இரண்டு முறை கடிதம் அனுப்பி யும் முதல்வர் குமாரசாமி புறக்கணித்துள்ளார். அரசியல் அமைப்பு சாசனத்தை முதல்வர் மீறியுள்ளார். பெரும்பான்மை இல்லாததால் முக்கிய தீர்மானங்கள் எடுக்க கூடாது என தலைமை செயலருக்கு அறிவுறுத்தினேன். அதையும் மீறி அதிகாரிகள் இடமாற்றம் உட்பட முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கவர்னர் தன் அறிக்கைப்படி மறைமுகமாக மாநில அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வலியுறுத்தியுள்ளார்.


இந்த இக்கட்டான நிலையில் கர்நாடக சட்டசபை யில் குமாரசாமி நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் ஓட்டெடுப்பு நடத்த வில்லை என்றால் மத்திய அரசு தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201923:49:40 IST Report Abuse

Allah Danielஒரு சிக்கலும் இல்லை..உச்ச நீதிமன்றம் தூங்குது..இதே உச்ச நீதிமன்றம் சபரிமலை விஷயத்தில் என்னமா பாஷா காட்டிச்சு..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-201918:27:40 IST Report Abuse

Endrum Indianஇதெல்லாம் அறிக்கை அனுப்பக்கூடாது, டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்து அந்த சபாநாயகர் மற்றும் முதன் மந்திரி இனி வாழ் நாள் முழுவதும் எந்த அரசியல் பதவியும் ஏற்க முடியாத படி உத்தரவு பிறப்பிக்கவேண்டும். ஒரு ப்ரின்சிபால் சொன்னா அந்த கல்லூரி வாத்தியார் அதன் படி நடக்கவேண்டும் இல்லையென்றால் வாத்தியார் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார் இது தானே உலக நடவடிக்கை அது ஏன் கூமுட்டை அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா என்ன???

Rate this:
merline - bangalore,இந்தியா
21-ஜூலை-201917:19:00 IST Report Abuse

merlineஜனநாயக படுகொலை,mla எல்லாம் காசுக்காக மும்பைஇல் இருகிறார்கள்,culprits ,எங்கள் தெருவில் காங்கிரஸ் காகா கத்தினான், இப்போது காசுக்காக மும்பை இல் இருக்கிறான்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூலை-201919:57:25 IST Report Abuse

தமிழ்வேல் இவனுவோலாம் பொசுக்குன்னு போயிடுவானுவோ... ...

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
21-ஜூலை-201922:33:10 IST Report Abuse

 nicolethomsonஎன்ன செய்யிறது ? ...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X