தலைகீழாக தேசியக் கொடி; சசி மீது அவமதிப்பு வழக்கு?

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : காங்கிரஸ், எம்.பி., சசி தரூர் மேஜையில், தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டு இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.






குஜராத் மாநிலம், ஜாம் நகரில், 1990ம் ஆண்டில், விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, பணி நீக்கம் செய்யப்பட்ட, ஐ.பி.எஸ்., அதிகாரி, சஞ்சீவ் பட் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜூன், 20ல், சஞ்சீவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட், அவரது மகன் சாந்தனு ஆகியோர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் காங்கிரஸ், எம்.பி., சசி தரூரை, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று முன்தினம் சந்தித்தனர். இது தொடர்பாக சசி தரூர், 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.'தன் கணவர் மீதான வழக்கு குறித்து, ஸ்வேதா என்னிடம் ஆலோசித்தார்.





நீதி நிச்சயம் வெல்லும் என்று கூறினேன்' என, அந்தப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளார்.அந்த டுவிட்டர் பதிவுடன் இணைக்கப்பட்ட படத்தில், சசி தரூர் மேஜையில், தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. இதையடுத்து, தேசியக் கொடியை மதிக்குமாறு, ஏராளமானோர் டுவிட்டரில், சசி தரூருக்கு பதில் அனுப்பினர். இன்னும் பலர், தேசியக் கொடியை அவமதித்த சசி தரூர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
21-ஜூலை-201914:31:24 IST Report Abuse
rajan மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது இதே மாதிரி நிகழ்வு நடந்ததற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
21-ஜூலை-201912:20:53 IST Report Abuse
தாண்டவக்கோன் விக்கிற கடையிலவே கொடிய கண்டமேனிக்கு வச்சுதான் விக்குறானுங்க
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஜூலை-201912:08:11 IST Report Abuse
Nallavan Nallavan மனைவிக்கு வாய்த்த மர்மமான மரணத்தில் இவனது பங்கு என்ன ?? அதை பாஜக சரியாக விசாரிக்காத மர்மமென்ன ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X