பொது செய்தி

தமிழ்நாடு

சோலையாறில் ஒரே நாளில் 13 அடி உயர்வு! பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 21, 2019
Advertisement
 சோலையாறில் ஒரே நாளில் 13 அடி உயர்வு! பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை:வால்பாறையில் பெய்யும் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம், ஒரே நாளில், 13 அடி உயர்ந்துள்ளது.வால்பாறையில், கடந்த மூன்று நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. விடிய, விடிய பெய்த கனமழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,726 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 164 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 40.53 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 13 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 2,662 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. மழை பொழிவு அதிகரித்து, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):சோலையாறு - 63, வால்பாறை - 62, மேல்நீராறு - 110, கீழ்நீராறு - 71, காடம்பாறை - 6, மேல் ஆழியாறு - 10, ஆழியாறு - 11, பரம்பிக்குளம் - 75, சர்கார்பதி - 23, துணக்கடவு - 21, பெருவாரிப்பள்ளம் - 22, பொள்ளாச்சி - 5, என்ற அளவில் மழை பெய்தது.
அருவிக்கு செல்ல தடைகன மழையால் வால்பாறையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.வால்பாறை - சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை பாதிப்பால் சாலக்குடி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பினால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X