எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிகாரப்பூர்வம்
இது, 'அதிகாரப்பூர்வ' ஆக்கிரமிப்பு!
குளத்துக்குள் கலெக்டர் ஆபீஸ்;
திருப்பூரில் அரங்கேறிய அவலம்

கோவை மற்றும் ஈரோடு மாவட்ட எல்லை பிரிக்கப்பட்டு, திருப்பூரை தலைமையிடமாக கொண்ட மாவட்டம், 2009, பிப்., 22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. திருப்பூர் நகர பகுதியிலேயே இடம் அமைய வேண்டுமென நினைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பல்லடம் ரோட்டிலுள்ள, 47 ஏக்கர் நிலம், 51 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்பட்டது.

இது, 'அதிகாரப்பூர்வ', ஆக்கிரமிப்பு!, குளத்துக்குள்,கலெக்டர் ஆபீஸ்; ,திருப்பூரில் ,அரங்கேறிய, அவலம்


ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலம் என்று, பதிவேட்டில் இருந்ததை, சாதகமாக பயன்படுத்தி, குளத்துக்குள் கலெக்டர் அலுவலகம் அமைத்துஉள்ளனர்.பல்லடம் சுற்றுப்பகுதிகளில் இருந்து, மழைநீர் வடிந்து ஓடையாக உருவெடுத்து, நொய்யலை நோக்கி வருகிறது.
ஜம்மனை ஓடை என்ற பெயருடன் வரும் ஓடை,தென்னம்பாளையம் குளத்தில் தேங்கி நிற்கும் வகையில், கக்கன் அமைச்சராக இருந்த காலத்தில், தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆர்., நகர் எல்லையில் உள்ள, 20 அடி உயரம், 100 அடி அகலத்தில் உள்ள, பிரமாண்ட அணையே இன்றும் அதற்கு சாட்சியாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும், கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் தேங்கும் மழைநீரே இதற்கு ஆதாரமாகிறது.தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 40 அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கும் வகையில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. கடந்த, 2012 அக்., 12ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2015 டிச., 28 ல் திறப்பு விழா நடந்தது.


வெள்ள அபாயம்

கலெக்டர் அலுவலக வளாகம், விருந்தினர் மாளிகை, துணை கலெக்டர் நிலை

அதிகாரிகளுக்கான, அடுக்குமாடி குடியிருப்பு, கலெக்டர் முகாம் அலுவலகம், டி.ஆர்.ஓ., மற்றும் திட்ட இயக்குனர் முகாம் அலுவலகம் ஆகியவை திறக்கப்பட்டன. தினமும், மழைவெள்ள அச்சத்து டன் தான் அதிகாரிகள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு அமைத்தும், கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர், புதிய வீட்டில் குடியேறவில்லை;மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதையடி.ஆர்.ஓ., மட்டும் 'தைரியமாக' குடியேறிஇருக்கிறார்.எஸ்.பி., அலுவலகம்

கலெக்டர் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகங் களுக்கு இடையே, எஸ்.பி., அலுவலகம் அமைக்க, 10 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.சற்று மேடான பகுதியாக இருந்ததால், எஸ்.பி., அலுவலகம் அமைக்க சிரமம் அதிகம் இல்லை. மொத்தம், 6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அலுவலகம் கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தி, தற்போது எஸ்.பி., அலுவலகம் இயங்கி வருகிறது.கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே, எஸ்.பி., முகாம் அலுவலகம் அமைக்கப் பட்டு உள்ளது இருப்பினும், பயன்பாடின்றி போட்டு வைக்கப்பட்டுள்ளது.அடுத்து உள்ள, 1.45 ஏக்கர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் முகாம் அலுவலகங்கள் அமைக்க, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துணை மின் நிலையம்
மின் தேவையை சமாளிக்க ஏதுவாக, கலெக்ட்ரேட் துணை மின் நிலையம் என்ற பெயரில், 70 சென்ட் பரப்பில், துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா நடக்க இருக்கிறது. மிக தாழ்வான பகுதி யாக இருந்ததால், 10 அடி உயரத்துக்கு கான்கிரீட் அஸ்திவாரம் எழுப்பி, அதன்மீது துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.கலெக்டர் அலுவலகம்,எஸ்.பி., அலு வலகம், கோர்ட் வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் அமைந்துள்ள பகுதி, மக்கள் பயன்பாட்டில் குளமாகத் தான் இருந்தது.தற்போது, வளாகத்தின் வடக்கே இருந்த பெரிய மண் ஏரி மட்டுமே அதன் அடையாளமாக இருக்கிறது.குளத்துக்கான அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற திட்டத்தில்,மண் ஏரியை வெட்டி, 2,500 லோடு கிராவல் மண் எடுக்கப்பட்டது. தற்போது, அதன்மீது, கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடையா ளத்தை மாற்றி னாலும் கூட, கனமழை பெய்யும்

Advertisement

போது கட்டடங்களைமிதக்க செய்யும் மழைநீர் வருகையே, தென்னம்பாளையம் குளம் என்ற பெயரில் குளம் ஒன்று இருந்ததை மீண்டும் உறுதி செய்கிறது.

'குளம் கிடையாதாம்!'திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் கூறியதாவது:மக்கள் நலன் கருதி, போக்குவரத்து வசதிக்காக, நகரின் மத்தியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இது, குளம் கிடையாது. தாழ்வான பகுதியில், மழைநீர் தேங்குவதால், அரசு அலுவலகங் களுக்கு மத்தியில், அழகிய பூங்காவை போல் மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஜம்மனை ஓடையில் தடுப்பு சுவர் அமைத்து, மரக் கன்றுகள் அதிகம் நட்டு வளர்க்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.ஓ., சமாளித்தார்.

காத்திருக்கும் பேராபத்து

கடந்த, 2011, நவ., மாதம், இந்த ஜம்மனை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த குளம் நிறைந்திருந்தது. அருகில் இருந்த வீடுகள் சேதமாகின. விருந்தினர் மாளிகை அமைந்துள்ள பகுதியில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், ஜம்மனை ஓடை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்து, வடக்கே திரும்பி செல்கிறது.
மண் ஏரியோ, தடுப்புச் சுவரோ வலுவாக இல்லாததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், கலெக்டர் அலுவலகம், கோர்ட்,விருந்தினர் மாளிகை,அரசு அதிகாரிகள் குடியிருப்புகளை, வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-ஜூலை-201914:01:08 IST Report Abuse

THENNAVANநண்பரே காட்டியது 2009 ல் நாசக்காரன் கருணாநிதி தமிழினத்துரோகி

Rate this:
Senthamizhsudar - Chennai,இந்தியா
21-ஜூலை-201913:17:45 IST Report Abuse

Senthamizhsudarநீட் தேர்வுக்கு போராட்டம் தெரிந்த அரசியல் கட்சிகளுக்கு இயற்க்கை நீர்பிடிப்பு அழியும் பொது அழிக்கும் போது போராடதெரிய வில்லை கேவலம் தமிழக அரசியல் வாதிகளே நீங்கள் தமிழ் தமிழகத்தை அழித்துகொன்டிருக்கிரீர்கள்.

Rate this:
GMM - KA,இந்தியா
21-ஜூலை-201910:22:04 IST Report Abuse

GMMமனையின் விலை உயர்வு அதனை சுற்றிய சாலை, வடிகால், குடிநீர், மின்சாரம், பஸ் நிலையம்...போன்றவற்றால் அதிகரிக்கிறது. அபிவிருத்தி செலவு அரசால் செய்யப்படும். மனை மறு விற்பனையில் அபிவிருத்தி பங்கை நில உடமைதாரரிடம் SRO பெற்று, அரசுக்கு செலுத்தினால் நில ஆக்கிரமிப்பு ஒழியும். 1947ல் ஒரு ச. அடி ஒரு ரூபாய் என வாங்கியது 2017ல் 1001 ஆக விற்பனை செய்ய 1000 ரூபாய் அரசு அபிவிருத்தி பணம். ஆனால், நிலம் விற்பவர், நில மாபியா பயன் படுத்தி கொண்டு சுகமாக வாழ்கின்றனர். அரசு குளம் ஆனாலும் நில விலை உயர்வு நிதி ஒதுக்கீடு முழுவதையும் கேட்கும். கட்டத்திற்கு பணம் போதாது. ஊருக்கு வெளியில் குறைந்த விலையில் நிலம் கழக இட ஒதுக்கீடு அதிகாரிகள் தேடுவர். குளம் மறையாது.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X