அமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

பீஜிங் : 'அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக சீனா போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும்' என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.latest tamil newsசீனாவின் முரண்பாடான ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறிய அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீனாவும் உயர்த்தியது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக உலக வங்கி கவலை தெரிவித்தது.


latest tamil newsஇந்தியாவுக்கான புதிய துாதராக நியமிக்கப்பட்டுள்ள சீனாவின் சங் வெய்டோங் கூறியாவது : வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து ஆரோக்கியான உறவை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. சமீபகாலமாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.


latest tamil newsஅமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான சந்தர்ப்பவாதமான வர்த்தக கொள்கைகளால் சீனா மட்டுமல்லாமல் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-201918:39:20 IST Report Abuse
ஆப்பு என்ன ஒரு கரிசனம்?
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
21-ஜூலை-201913:05:50 IST Report Abuse
S.VELMURUGAN This is the time for India to silently watch the fight between America and China. China is unreliable to any country in the world.China continuously supported the world terrorist Mazoor Azad along with Pakistan to distrubt India's peace. China repeatedly blocks India to enter in to Nuclear Suppliers Group to get the advance nuclear technology from all over the country so that our economy will improve and we can strengthen our defence.China continuously distrubs eastern parts of our India by giving material help ,training help and money help to the people living in those areas. China never bother International court order against it in the case of SOUTH CHINA SEA.Our plane AN32 continuously met accident in the area of Arunachala Pradesh because of China.Moreover we can still give somany examples of China's activities either directly or indirectly against our peace loving India. So India should keep silence and watch the situation.Thanks.
Rate this:
Cancel
21-ஜூலை-201911:55:53 IST Report Abuse
அருண் பிரகாஷ் அமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் துணை வேண்டும்..அப்போ இவ்ளோ நாள் எதற்காக பாகிஸ்தான் துணை சீனாவிற்கு தேவைப்பட்டது.இவன் நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத மசூத் அசார் விவகாரத்தில் எவ்வளவு ஆட்டம் காட்டினான்.இப்போ இந்தியாவின் முறை.இவனை நம்பவே முடியாது.ராகுல் அவர்களை பிரதமர் ஆக்கிவிட முழுமுயற்சி செய்த நாடுகளில் சீனாதான் முதன்மை.இப்போ உலக நாடுகள் இந்திய ஏற்றுமதி,இறக்குமதியால் நன்மை பெறுகின்றன.முக்கியமாக சீனா மற்றும் அமெரிக்கா.ஆனால் இருவருமே திருடர்கள்.கொஞ்சம் எச்சரிக்கை தேவை இந்தியாவிற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X