லொல்லு கொடுக்கும் ஜொள்ளு.. - 6 மாதங்களில் 800 பேர் கைது| Dinamalar

லொல்லு கொடுக்கும் ஜொள்ளு.. - 6 மாதங்களில் 800 பேர் கைது

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (7)
லொல்லு, ஜொல்லு, Delhi,டில்லி, பெண்கள், வழக்கு, கைது

புதுடில்லி: பெண்களிடம் வம்பு செய்யும் ஆண்களை பிடிக்க போலீசார் நடத்திய ' ஆப்ரேஷன் ரோமியோ ' மூலம் டில்லி போலீசார் கடந்த 6 மாதங்களில் 800 பேரை கைது செய்துள்ளனர். 248 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டில்லி மற்றும குருகிராம் நகரில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாக வந்த புகாரை அடுத்து டில்லி போலீசார் ' ஆப்ரேஷன் ரோமியோ ' என்ற ஒரு தனிப்படையை அமைத்தனர். இதில் 100 ஆண் போலீசாரும், 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாரும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது ரகசியமாக கண்காணிப்பது இந்த படையினரின் முக்கிய பணியாக இருந்தது. சந்தேகம் படும் நபர் மற்றும் பெண்கள் நடமாடும் பகுதியில் உலா வரும் இளைஞர்கள் என கண்ணி வைத்து போலீசார் செயல்பட்டனர். இதில் கடந்த 6 மாதங்களில் 5 முறை அந்த ' ஆப்ரேஷன் ' நடத்தப்பட்டது.






இந்த ' ஆப்ரேஷனில் ' இது வரை மொத்தம் 800 பேர் பிடிபட்டனர். காரணம் இல்லாமல் உலா வருவது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சம்பந்தம் இல்லாத இடங்களில் நிற்பது, ஜொள்ளு பார்ட்டிகள் என போலீசார் கைது வேட்டை நடத்தினர். தொடர்ந்து இந்த நடவடிக்கை இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X