பொது செய்தி

இந்தியா

ரூ.800 க்கு ரூ.128 கோடி கேட்ட மின்துறை: உ.பி.,யில்தான் இது

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (31)
Advertisement
UP,Bill, Electricity, House, உ.பி., மின்கட்டணம், ஏழை, அதிர்ச்சி,

புதுடில்லி: உ.பி.,யில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.128 கோடி மின்கட்டணம் செலுத்தும்படி பில் வந்துள்ளது. இதனை சரி செய்வதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


மின் இணைப்பு துண்டிப்புஉத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷமீம். மனைவி நிஷாவுடன் வசிக்கும் இவருடைய வீட்டில் ஒரு பேனும், லைட்டும் மட்டுமே இருக்கிறது. வழக்கமாக 700 முதல் 800 ரூபாய் கட்டணம் செலுத்திய ஷமீமுக்கு இந்த மாதம் மின்வாரியம் ஷாக் கொடுத்தது. 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் மின் கட்டணமாக செலுத்த பில் வந்தது.

உ.பி., மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷமீம். இவர் தனது மனைவி நிஷாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், 2 கிலோ வாட் திறன் கொண்ட மின் இணைப்புக்கு மாத கட்டணமாக ரூ.128,45,95,444 வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பிரச்னையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளை நாடிய போது, அவரின் கோரிக்கையை கவனிக்காமல், மின் கட்டணத்தை செலுத்தும்படி கூறி வருகின்றனர். இந்த தொகையை செலுத்தவில்லை எனக்கூறி, வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர்.


நடவடிக்கை இல்லைஇது குறித்து ஷமீம் கூறுகையில், எனது கோரிக்கையை யாரும் கவனிக்க மறுக்கின்றனர். இந்த தொகையை எப்படி செலுத்த முடியும். இது குறித்து புகார் அளிக்க சென்றால், முதலில் கட்டணத்தை செலுத்தினால், தான் மீண்டும் மின் இணைப்பு வழங்க முடியும் எனக்கூறினர். எனது வீட்டிற்கு மாதம் ரூ.700 முதல் ரூ.800 வரை தான் கட்டணம் வரும். ஒட்டு மொத்த நகரத்திற்கான கட்டணத்தை என்னிடம் கேட்கின்றனர்.
கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை நாடியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் விளக்கு மற்றும் மின்விசிறி மட்டும் தான் பயன்படுத்துகிறோம். எப்படி அதிக தொகை வரும். நாங்கள் ஏழைகள். எப்படி இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியும் முடியும் என்றார்.சாதாரண பிரச்னைஇது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இது பெரிய பிரச்னை இல்லை. தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட கோளாறு. பில்லை எங்களிடம் அனுப்பினால், அதனை சரி செய்து தருகிறோம் எனக்கூறினர்.

இதற்கு முன்னர் கன்னூஜ் மாவட்டத்தை சேர்ந்த ஏழை ஒருவருக்கு ரூ.23 கோடிக்கு மின்கட்டண பில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
22-ஜூலை-201912:02:59 IST Report Abuse
Jayvee யோகி யோகாவிலிருந்து வெளி வந்து ஆவன செய்யவேண்டும்.. அதுவும் ஒரு இஸ்லாமிய முதியவர்.. நிச்சயம் காங்கிரஸ் இதை வைத்து அரசியல் செய்யும்.. பிரியங்கா தர்ணா போராட்டம் செய்வதற்கு முன் நடவடிக்கை தேவை .. அறிவில்லா மின் வாரிய ஊழியரை பணி நீக்கம் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
21-ஜூலை-201922:11:45 IST Report Abuse
THINAKAREN KARAMANI அந்த ஏழை முதியவர். கோடிக்கணக்கில் வந்த பில்லை மின் வாரிய அதிகாரிகளிடம் காண்பித்துக் கேட்டபோது பணத்தைக்கட்டிவிட்டு வா என்று எப்படி சொல்லலாம்? அவரை அதிகாரியிடம் அழைத்துச்சென்று பில்லில் எதோ தவறு நடந்துள்ளது என்று அந்த அதிகாரியிடம் சொல்லி இந்த விஷயத்தை எளிமையாக முடித்திருக்கலாம். இதைவிட்டுவிட்டு வீட்டுக்கரண்டை கட் பண்ணுவது என்ன நியாயம்? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
malaipalaniappan - chennai,இந்தியா
21-ஜூலை-201920:44:03 IST Report Abuse
malaipalaniappan அதிகாரிகளை நிரந்தமாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X