ரூ.800 க்கு ரூ.128 கோடி கேட்ட மின்துறை: உ.பி.,யில்தான் இது | UP Man Asked To Pay Rs. 128 Crore Bill To Restore Electricity To His House | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.800 க்கு ரூ.128 கோடி கேட்ட மின்துறை: உ.பி.,யில்தான் இது

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (31)
Share
UP,Bill, Electricity, House, உ.பி., மின்கட்டணம், ஏழை, அதிர்ச்சி,

புதுடில்லி: உ.பி.,யில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.128 கோடி மின்கட்டணம் செலுத்தும்படி பில் வந்துள்ளது. இதனை சரி செய்வதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


மின் இணைப்பு துண்டிப்புஉ.பி., மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷமீம். இவர் தனது மனைவி நிஷாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், 2 கிலோ வாட் திறன் கொண்ட மின் இணைப்புக்கு மாத கட்டணமாக ரூ.128,45,95,444 வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பிரச்னையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளை நாடிய போது, அவரின் கோரிக்கையை கவனிக்காமல், மின் கட்டணத்தை செலுத்தும்படி கூறி வருகின்றனர். இந்த தொகையை செலுத்தவில்லை எனக்கூறி, வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர்.


நடவடிக்கை இல்லைஇது குறித்து ஷமீம் கூறுகையில், எனது கோரிக்கையை யாரும் கவனிக்க மறுக்கின்றனர். இந்த தொகையை எப்படி செலுத்த முடியும். இது குறித்து புகார் அளிக்க சென்றால், முதலில் கட்டணத்தை செலுத்தினால், தான் மீண்டும் மின் இணைப்பு வழங்க முடியும் எனக்கூறினர். எனது வீட்டிற்கு மாதம் ரூ.700 முதல் ரூ.800 வரை தான் கட்டணம் வரும். ஒட்டு மொத்த நகரத்திற்கான கட்டணத்தை என்னிடம் கேட்கின்றனர்.
கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை நாடியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் விளக்கு மற்றும் மின்விசிறி மட்டும் தான் பயன்படுத்துகிறோம். எப்படி அதிக தொகை வரும். நாங்கள் ஏழைகள். எப்படி இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியும் முடியும் என்றார்.


latest tamil news

சாதாரண பிரச்னைஇது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இது பெரிய பிரச்னை இல்லை. தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட கோளாறு. பில்லை எங்களிடம் அனுப்பினால், அதனை சரி செய்து தருகிறோம் எனக்கூறினர்.

இதற்கு முன்னர் கன்னூஜ் மாவட்டத்தை சேர்ந்த ஏழை ஒருவருக்கு ரூ.23 கோடிக்கு மின்கட்டண பில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X