பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனத்திற்கு கூடுதல் ஏற்பாடுகள்: தலைமை செயலர்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு, பொது மக்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் சண்முகம் கூறியுள்ளார்.காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில், நடக்கும் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலில் செய்யப்பட்ட பாதுகாப்பு
athivaradhar, காஞ்சிபுரம், அத்திவரதர், பாதுகாப்பு ஏற்பாடுகள், தலைமை செயலர், சண்முகம், டிஜிபி,  திரிபாதி,

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு, பொது மக்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் சண்முகம் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில், நடக்கும் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


latest tamil news
பின்னர் தலைமை செயலர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அத்திவரதரை, நோயாளிகள், முதியவர்கள், தரிசிக்க பேட்டரி கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளோம். பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் கூடுதலாக பிஸ்கட், தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வரிசையில் நிற்போர்கள் ஓய்வெடுக்க நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கூறியுள்ளோம். முக்கிய நாட்களில், அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகாலை 4 மணிக்கு துவங்குவது குறித்து பரிசீலனை நடக்கிறது. விஐபி தரிசனம் பொது மக்கள் பாதிக்காத வகையில் செய்யப்படும். வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு கோபுர பகுதியில், மருத்துவ முகாம் நடத்தப்படும். வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.


latest tamil news
டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உற்சவத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைகுறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு கூடுதலாக தன்னார்வலர்களை அழைத்துள்ளோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
21-ஜூலை-201921:35:25 IST Report Abuse
Ram இறைவன் மேல் பக்தி பிரேமை உள்ளவன் எதை பற்றியும் கவலையில்லாமல் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். ஆனால் பெருமைக்காக செல்பவர்கள்? ஆனாலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் பொறுப்பு திருக்கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தது. வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு போங்க என்று சொல்லி என்ன நண்பா? சந்தோஷம்!
Rate this:
Cancel
kannan r - chennai,இந்தியா
21-ஜூலை-201921:19:16 IST Report Abuse
kannan r மிக மிக மோசமான ஏற்பாடுகள். 3 K .M முன்னால் கார்கள் நிறுத்தப்பட்டு கடும் வெய்யிலில் பக்தர்களை நடக்க வைக்கின்றனர் காவல் துறையினர். தரிசனம் பற்றிய அப்பப்போது அறிவிப்பு இல்லை. நான்கு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு, 18/7/2019 அன்று மாலை தரிசனம் தடை செய்யப் பட்ட செய்தி கிடைத்தது.
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி அந்த இறப்புக்கு காரணம் இந்த கோயில் நிர்வாகம் தான். அப்பாவி பக்தர்களின் உயிர் அவர்களை சும்மா விடாது. அந்த சம்பவம் நடந்த அன்று நான் எனது குடும்பத்தாருடன் சென்றிருந்தேன். அத்திகிரி மண்டபந்திற்கு பின்பறம் சமார் நூறு மீட்டரைக்கடக்க முக்கால் மணிநேரம் ஆனது. எக்கச்சக்க கூட்டம். அந்த திறந்த வெளியில் மூச்சு திணறல் பலருக்கு உண்டாயிற்று. நம்பமுடியவில்லை. எப்படி அந்த திறந்த வெளியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. நிச்சயமாக கொஞ்சம் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். ஓரு எக்ஸாஸ்ட் மின் விசிறி கூட வைக்கவில்லை. வேடிக்கை என்ன என்றால் இரண்டு காவலர்கள் ஒரு அட்டையை வைத்துக் கொண்டு கைவீசம்மா கைவீசென்று காற்றை பக்தர்கள் மீது வீசியது கொஞ்சம் ஆறுதல். இதையெல்லாம் கண்டும் காணமல் எப்படி அலட்சியமாக மனிதாபிமானமற்று இருந்தார்கள் என்று புரியவில்லை. நாத்திகர் ஆட்சியில் இதைவிட மோசமானதை எதிர்பார்பது முட்டாள் தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X