பொது செய்தி

தமிழ்நாடு

சந்திரயான் 2 ஐ எதிர்பார்க்கும் விஞ்ஞானிகள்: இஸ்ரோ

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
chandrayaan2, Isro, Sivan, Moon,சந்திரயான் 2, இஸ்ரோ, சிவன், நிலவு, சந்திரன்

சென்னை: சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவதை உலகளவில் ஏராளமான விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரயான் 2 விண்கலம், 45 நாட்கள் பயணம் செய்து, நிலவின் தென் துருவத்தில் இறங்கும். கடந்த முறை ஏவ முற்பட்ட போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட் டவுன் நிறுத்தி பிரச்னை சரி செய்யப்பட்டது. இதற்கு பின், நிறைய சோதனைகள் நடந்துள்ளன. ஒன்றரை நாள் சோதனை நடந்தது. மீண்டும் தொழில்நுட்ப கோளாறு நடக்க வாய்ப்பு இல்லை.

நிலவில் யாரும் தரையிறங்காத இடத்தில், சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்க உள்ளதால், விஞ்ஞான ரீதியாக பல பலன்கள் கிடைக்கும். விஞ்ஞான ரீதியான ஏராளமான சோதனைகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதனால், சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவதை இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் உள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். சந்திரயான் 2 தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த 15ம் தேதி சந்திரயான் விண்கலம் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டு, சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜூலை 22) பிற்பகல் 2.34 மணிக்கு சந்திரயான் 2 விண்ணி்ல பாயும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை துவங்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-201901:53:28 IST Report Abuse
Mani Ivan moonjiya paarthaale theriyudhu, sanaadhana makka nu, rocket eppadi pogum?
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
21-ஜூலை-201919:15:04 IST Report Abuse
JSS இந்த சோதனையில் இஸ்ரோ வெற்றி பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வெற்றிபெற வாழ்த்துக்கள். அரசியல் தலையீடு இல்லையென்றால் எல்லாத்துறைகளும் சாதனை படைக்கமுடியும். இஸ்ரோ அதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்
Rate this:
Share this comment
Cancel
Bala Iyer - Tirunelveli,இந்தியா
21-ஜூலை-201916:35:15 IST Report Abuse
Bala Iyer இது வளர்ந்த இந்தியா. ஹோமி பாபா, சதீஷ் தவான், கலாம் மற்றும் இவர்கள் காலத்தில் வாழ்ந்த மாமேதைகள் நமது நாடு செல்ல வேண்டிய பாதையை நன்றாக கண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இந்தியனும் கடமைபட்டுள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X